AUS vs ENG : இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமை

Starc-1
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 32 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Finch

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்தது. பின்ச் அதிகபட்சமாக 100 ரன்களை குவித்தார் மேலும் வார்னர் 53 ரன்கள் குவித்தார் .

இதனைத் தொடர்ந்து 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 44.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துசார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் பெரென்ட்ராப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Starc

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி பெற்ற வெற்றி மூலம் அந்த அணி அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 6 வெற்றிகள் மற்றும் இந்திய அணிகளுக்கு தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணி 6 போட்டிகளில் 11 புள்ளிகளிலும் இந்திய அணி 5 போட்டிகள் 9 புள்ளிகளுடன் அடுத்து அடுத்த இடத்தில் உள்ளன. எனவே மீதமுள்ள மூன்று இடங்களுக்கு மிகுந்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement