ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2023 முதல் நடைபெற்ற அத்தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று முதல் முறையாக ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்நிலையில் 2023 – 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடரில் அசத்திய 11 வீரர்களை கொண்ட கனவு அணியை ஆஸ்திரேலிய வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது. அந்த அணியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக இந்தியாவின் யசஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2023இல் அறிமுகமான அவர் 2024 இங்கிலாந்து தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
ஆஸி கனவு அணி:
கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் அற்புதமான சதத்தை அடித்த அவர் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்து முழுமூச்சுடன் வெற்றிக்காக போராடினார். அந்த வகையில் 19 போட்டிகளில் 1798 ரன்களை 52.88 என்ற அற்புதமான சராசரியில் குவித்துள்ள ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய அணியின் கனவு அணியில் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருடன் மற்றொரு துவக்க ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா தேர்வாகியுள்ளார்.
3வது இடத்தில் நியூசிலாந்து நம்பிக்கை நாயகன் கேன் வில்லியம்சன் 11 போட்டிகளில் 1152 ரன்களை குவித்ததால் சேர்க்கப்பட்டுள்ளார். 4வது இடத்தில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் 2023 – 25 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 22 போட்டிகளில் 1968 ரன்களை குவித்து தமக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.
2 இந்தியர்கள்:
5, 6வது இடங்களில் இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹரி ப்ரூக் 1463 ரன்கள், இலங்கையின் கமிண்டு மெண்டிஸ் 1123 ரன்கள் அடித்து தேர்வாகியுள்ளார்கள். இந்த அணிக்கு விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். கேப்டனாக 73 விக்கெட்டுகள், 516 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பட் கமின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வாகியுள்ளார்.
இதையும் படிங்க: சாய் சுதர்சனுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கனும்.. அவர் நல்ல டேலன்ட்டான பிளேயர் – ஹர்பஜன் சிங் கருத்து
15 போட்டிகளில் 77 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆஸ்திரேலியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக செயல்பட்டதை மறக்க முடியாது. அவரை தங்களுடைய அணியில் கொண்டிருப்பதைப் பெருமையாக கருதுவதாக ஆஸ்திரேலிய வாரியம் பாராட்டியுள்ளது. அவருடன் 9 போட்டிகளில் 48 விக்கெட்டுகள் அள்ளிய நியூசிலாந்தின் மாட் ஹென்றியும் தேர்வாகியுள்ளார். 6 போட்டிகளில் 46 விக்கெட்டுகள் எடுத்த பாகிஸ்தானின் நோமன் அலி ஸ்பின்னராக தேர்வாகியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ககிஸோ ரபாடா 12வது வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



