157/1 டூ 209 ஆல் அவுட்.. மாஸ் காட்டிய இலங்கையை அப்படியே பெட்டி பாம்பாக அமுக்கிய ஆஸி.. கொதித்தெழுமா?

sl vs aus
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 16ஆம் தேதி லக்னோ நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 14வது லீக் போட்டியில் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. அதில் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலியா செமி ஃபைனலுக்கு செல்ல வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

மறுபுறம் கடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் 345 ரன்களை வாரி வழங்கி வரலாற்று தோல்வியை சந்தித்த இலங்கையும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. அந்த நிலைமையில் இலங்கையின் கேப்டன் தசுன் சனாக்கா காயமடைந்து வெளியேறிய நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற குசால் மெண்டிஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

சுருட்டிய ஆஸ்திரேலியா:
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீரர்கள் நிசாங்கா மற்றும் குசால் பெரேரா ஆகியோர் சிறப்பாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தனர். இருப்பினும் பவர் பிளே ஓவர்கள் கடந்து 21 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 125 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் நிசாங்காவை 8 பவுண்டரியுடன் 61 ரன்களில் அவுட்டாக்கிய கேப்டன் கமின்ஸ் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அசத்திய குசால் பெரேராவையும் 12 பவுண்டரியுடன் 78 (78) ரன்களில் போல்டாக்கினார்.

ஆனால் அதுவே கடைசியில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது போல் அடுத்ததாக வந்த கேப்டன் குஷால் மெண்டிஸை 9 ரன்களில் காலி செய்த ஆடம் ஜாம்பா சமரவிக்ரமாவையும் 8 ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் திடீரென சரிவை சந்தித்த அந்த அணிக்கு ஒருபுறம் அசலங்கா நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் டீ சில்வா 7, வெல்லாலகே 2, கருணரத்னே 2 என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அழுத்தத்தை உண்டாக்கினர்.

- Advertisement -

அதன் காரணமாக அசலங்கா முடிந்தளவுக்கு போராடி 25 ரன்களில் கடைசி விக்கெட்டாக அவுட்டானார். அதனால் 43.3 ஓவரிலேயே 209 ரன்களுக்கு இலங்கையை சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 5 விக்கெட்டுகளும் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ் தலா 2 விக்கெட்களும் சாய்த்தனர்.

இதையும் படிங்க: 157/1 டூ 209 ஆல் அவுட்.. மாஸ் காட்டிய இலங்கையை அப்படியே பெட்டி பாம்பாக அமுக்கிய ஆஸி.. கொதித்தெழுமா?

குறிப்பாக 157/1 என்ற நல்ல நிலையில் இருந்த இலங்கையை மேற்கொண்டு 62 ரன்கள் மட்டுமே கொடுத்த ஆஸ்திரேலியா அனல் பறக்கும் பந்து வீச்சில் 209 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது. அதை விட தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி இப்போட்டியில் வென்று கொதித்தெழுந்து செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement