- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs AUS : 2016 முதல் இந்தியாவை சொந்த மண்ணில் அடக்கிய ஒரே அணியாக மிரட்டும் ஆஸி – மணிமகுடத்தையும் பறித்து சாதனை

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அத்துடன் பட் கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் வெளியேறியதால் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் கொதித்தெழுந்து அபார வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து அகமதாபாத் நகரில் நடைபெற்ற 3வது போட்டியிலும் இந்தியாவை வெற்றி பெற விடாமல் டிரா செய்த அந்த அணி அத்தொடரை திருப்தியுடன் நிறைவு செய்தது.

மறுபுறம் 2 – 1 (4) என்ற கணக்கில் தொடரை வென்று சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்து 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா இலங்கையை நியூசிலாந்து தோற்கடித்த உதவியுடன் ஜூன் 7ஆம் தேதி லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை மீண்டும் எதிர்கொள்ள தகுதி பெற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் 189 ரன்களை ராகுல் – ஜடேஜா ஆகியோரது உதவியுடன் போராடி வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

- Advertisement -

அடக்கும் ஆஸ்திரேலியா:
ஆனால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் அனலாக பந்து வீசி இந்தியாவை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிக பந்துகளை மீதம் வைத்து சாதனை வெற்றி பெற்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவரில் ஆல் அவுட்டானாலும் 269 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் 47 ரன்களும் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 270 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 30, சுப்மன் கில் 37, விராட் கோலி 54, கேஎல் ராகுல் 32 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களில் அவுட்டான நிலையில் ஹர்டிக் பாண்டியா 40, ஜடேஜா 18 என முக்கிய வீரர்களை பினிஷிங் செய்ய விடாமல் அவுட்டாக்கிய ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 49.1 ஓவரிலேயே 248 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற ஆஸ்திரேலியா இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

- Advertisement -

மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக செயல்பட்டு வரும் இந்தியா கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு ஒருநாள் தொடரில் தோற்றிருந்தது. அதன் பின் தொடர்ந்து சொந்த மண்ணில் 18 ஒருநாள் தொடர்களில் வெற்றி நடை போட்ட இந்தியாவை கடந்த 2019ஆம் ஆண்டு ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா எதிராக 3 – 2 (5) என்ற கணக்கில் தடுத்து நிறுத்தி தோல்வியை பரிசளித்தது. தற்போது அதன் பின் 26 ஒருநாள் தொடர்களில் சொந்த மண்ணில் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ள ஆஸ்திரேலியா 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை பரிசளித்துள்ளது.

அப்படி 2016 முதல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியாவை 2 முறை அதன் சொந்த மண்ணில் அடக்கி அசத்தியுள்ள ஆஸ்திரேலியா ஐசிசி தர ஒருநாள் கிரிக்கெட் வரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி பிப்ரவரியில் இலங்கை மற்றும் நியூசிலாந்தை தோற்கடித்த இந்தியா நம்பர் ஒன் அணியாக மணிமகுடம் சூடி சாதனை படைத்தது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க: IND vs AUS : இந்திய அணிக்கு எதிரான எனது இந்த அதிரடி ஆட்டத்திற்கு காரணமே இதுதான் – தொடர்நாயகன் மார்ஷ் பேட்டி

ஆனால் அதை ஒரு மாதம் கூட தக்க வைக்க முடியாத அளவுக்கு இந்தியாவின் மணி மகுடத்தை பறித்துள்ள ஆஸ்திரேலியா தங்களை ஆல் ஏரியாவிலும் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் அக்டோபர் மாதம் உலக கோப்பை நடைபெறும் வருடத்தில் இப்படி தோல்வியை சந்தித்தது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -