ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதில் அக்டோபர் 11ஆம் தேதி துபாயில் 14வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அலியா ரியாஸ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஆஸ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 83 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் அலிசா ஹீலி 37, எலிஸ் பெரி 22*, பெத் மூனி 15 ரன்கள் எடுத்தனர். அதனால் 11 ஓவரில் 83-1 ரன்களை எடுத்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தான் நாக் அவுட்:
இதுவரை விளையாடி 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்து 99% செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபுறம் 3 போட்டிகளில் பாகிஸ்தான் 2வது தோல்வியை சந்தித்ததால் கடைசிப் போட்டியில் வென்றாலும் செமி ஃபைனல் செல்வதற்கு 99% வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் குரூப் ஏ ஏற்கனவே இலங்கை வெளியேறி விட்டது.
அதனால் ஆஸ்திரேலியாவுக்குப் பின் 2வது அணியாக செமி ஃபைனல் செல்வதற்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் தற்சமயத்தில் இந்தியா 4 மற்றும் நியூசிலாந்து 2 புள்ளிகளுடன் 2, 3வது இடங்களில் உள்ளன. அதில் நியூசிலாந்தை (-0.050) விட இந்தியாவின் (+0.576) ரன்ரேட் நன்றாக இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியா செமி ஃபைனல் செல்வதற்கு தங்களுடைய கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும்.
செமி ஃபைனல் வாய்ப்பு:
ஆனால் அது சிம்ம சொப்பனம் என்பது ரசிகர்களுக்குத் தெரியும். மறுபுறம் தங்களது கடைசி 2 போட்டிகளில் வென்றால் நியூசிலாந்து செமி ஃபைனலுக்கு சென்று விடும். எனவே இந்தியா செமி ஃபைனல் ஒன்று ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் அல்லது ஆஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்திக்காமல் ரன்ரேட்டை கொஞ்சம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன்? – வெளியான தகவல்
அப்படி நடந்தால் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அதனுடைய கடைசி 2 போட்டியில் வென்றாலும் இந்தியா செமி ஃபைனல் செல்லும். ஒருவேளை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றாலும் இந்தியா செமி பைனல் செல்ல வாய்ப்பு ஃஇருக்கிறது. அதற்கு நியூசிலாந்து தனது கடைசி 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அல்லது நியூஸிலாந்து ஒரு போட்டியில் தோற்றாலும் அந்த அணியை விட அதிக ரன் ரேட் பெற்றிருந்தால் இந்தியா செமி ஃபைனல் செல்லலாம்.



