நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன்? – வெளியான தகவல்

Shami
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அதன்பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருக்கிறார். உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சில மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டார்.

முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது ஏன்? :

அதன் பின்னர் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருந்தே மெல்ல மெல்ல பயிற்சிகளை துவங்கிய முகமது ஷமி வலைப்பயிற்சியில் பந்துவீசி வருகிறார். இருந்தாலும் தான் முழு உடற்தகுதியுடன் தான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பேன் என்று ஏற்கனவே முகமது ஷமி அறிவித்திருந்தார்.

- Advertisement -

ஏனெனில் ஒருவேளை தான் பாதி உடற்தகுதியுடன் மீண்டும் இந்திய அணிக்கு வந்து மீண்டும் காயமடைந்தால் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனாலே அந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் தொடர் பயிற்சி மேற்கொண்டு வந்த அவருக்கு கணிக்காலில் வீக்கமும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் அதனை மறுத்த முகமது ஷமி விரைவில் இந்திய அணிக்கு திரும்புவதாக அறிவித்திருந்தார். இருப்பினும் நேற்று பிசிசிஐ-யின் மூலம் வெளியிடப்பட்ட நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முகமது ஷமி ஏன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெறுவதால் முகமது ஷமியின் தேவை அதிகம் இருக்காது. அதே போன்று நியூசிலாந்து தொடருக்கு அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : 15 பேர் கொண்ட டீம் மட்டுமில்ல.. மேலும் 4 டிராவல் ரிசர்வ் வீரர்களை அறிவித்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ

அதுபோன்ற பெரிய தொடரில் முகமது ஷமி போன்ற அனுபவ வீரர் அவசியம் என்பதனாலே இந்த நியூசிலாந்து தொடரில் அவரை தேர்வு செய்யாத இந்திய நிர்வாகம் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் அவர் மீண்டும் அவரை தேர்வுசெய்ய இருக்கிறது. இதன் காரணமாகவே அவருக்கு மேலும் ஓய்வு கொடுக்கும் வகையில் இந்த நியூசிலாந்து தொடரில் அவரது பெயரை சேர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Advertisement