கருணையின்றி நெதர்லாந்தை 90க்கு சுருட்டி ஓடவிட்ட ஆஸ்திரேலியா.. வரலாறு காணாத உலக சாதனை வெற்றி

AUS vs NED
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 25ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்து வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு மிட்சேல் மார்ஷ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னருடன் அடுத்ததாக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக அரை சதமடித்து 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதற்கிடையே 50 ரன்கள் கடந்த வார்னருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்து 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மாஸ் வெற்றி:
மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 11 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 104 (93) ரன்கள் விளாசி அவுட்டானார். இந்த நிலைமையில் ஜோஸ் இங்லீஷ் 14 ரன்களில் அவுட்டானாலும் 40வது ஓவரில் வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி வெறும் 27 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார்.

நேரம் செல்ல செல்ல நெதர்லாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய அவர் 40 பந்துகளில் 100 ரன்கள் கடந்து உலகக் கோப்பையில் அதிவேகமாக சதமடித்த வீரராக உலக சாதனை படைத்து 9 பவுண்டர் 8 சிக்ஸருடன் 106 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 399/8 ரன்கள் எடுக்க நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக லோகன் வேன் பீக் 4 விக்கெட்களை சாய்த்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 400 என்ற மெகா இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு மேக்ஸ் ஓ’தாவுத் 6, விக்ரம்ஜித் சிங் 25, ஆக்கர்மேன் 10, எங்கேல்பேர்ச்ட் 11, பஸ் டீ லீடி 4, நிதமனரு 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவின் அனல் பறந்த பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அதனால் கேப்டன் எட்வர்ட்ஸ் 12* ரன்கள் எடுத்தும் 21 ஓவரிலேயே நெதர்லாந்தை 90 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: அர்ஜெண்டினாவுக்கு மெஸி மாதிரி.. இந்தியாவுக்கு அவர் உ.கோ ஜெயிப்பாரு.. மைக்கேல் வாகன் உறுதி

சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 300 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற மாபெரும் உலக சாதனைப் படைத்தது. இதற்கு முன் கடந்த 2015 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். அந்தளவுக்கு முரட்டுத்தனமான வெற்றி பெற்று ரன் ரேட்டை அதிகரித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4, மிட்சேல் மார்ஷ் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement