Ashes 2023 : டி20 மிஞ்சிய த்ரிலலர், டெயில் எண்டருடன் மிரட்டிய கமின்ஸ் – இங்கிலாந்தின் அதிரடியை தூளாக்கி ஆஸி சாதித்தது எப்படி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் நூற்றாண்டு பழமை வாய்ந்த 2023 ஆஷஸ் கோப்பையில் எட்ஜ்பஸ்தன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 393/8 ரன்கள் குவித்து முதல் நாளிலேயே டிக்ளர் செய்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 118* ரன்களும் ஜாக் கிராவ்லி 61 ரன்களும் ஜானி பெஸ்ட் 78 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி பெரிய சவாலை கொடுத்த போதிலும் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக டேவிட் வார்னர் 9, லபுஸ்ஷேன் 0, ஸ்மித் 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38, அலெக்ஸ் கேரி 66, கேப்டன் கமின்ஸ் 38 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்தனர்.

- Advertisement -

திரில் வெற்றி:
அவர்களுடன் மறுபுறம் நங்கூரமாக நின்று சதமடித்து 141 ரன்கள் குவித்து மிகப்பெரிய சவாலை கொடுத்த உஸ்மான் கவாஜாவை வரலாறு காணாத ஃபீல்டிங்கை செட்டிங் செய்து அவுட்டாக்கி 7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் நிதானத்தை வெளிப்படுத்தாமல் மீண்டும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 46, ஹரி ப்ரூக் 46, கேப்டன் ஸ்டோக்ஸ் 43 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் மற்றும் கேப்டன் லயன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 281 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு அமைத்த டேவிட் வார்னர் 36, மார்னஸ் லபுஸ்ஷேன் 13, ஸ்டீவ் ஸ்மித் 6 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் பெவிலியன் திருப்பி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் இன்று துவங்கிய கடைசி நாளில் 174 ரன்கள் தேவைப்பட்ட போது ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் உஸ்மான் கவாஜா நங்கூரத்தை போட்ட நிலையில் எதிர்ப்புறம் ஸ்காட் போலண்ட் 20, டிராவிஸ் ஹெட் 16, கேமரூன் க்ரீன் 28 என அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் உண்டாக்கி இங்கிலாந்து போராடியது. குறிப்பாக அரை சதமடித்து போராடிய கவாஜாவை 65 ரன்களில் கேப்டன் ஸ்டோக்ஸ் அவுட்டாக்கியதால் பெரிய பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் மறுபுறம் சவாலை கொடுக்க முயற்சித்த அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஜோ ரூட் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதன் காரணமாக 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 விக்கெட்கள் மட்டுமே இருந்ததால் டி20 போட்டியை மிஞ்சி அனல் பறந்த அப்போட்டியில் அடுத்ததாக வந்த கேப்டன் பட் கமின்ஸ் நிதானமாகவும் சமயம் கிடைக்கும் போது அதிரடியாகவும் விளையாடி வெற்றிக்கு போராடினார். அவருக்கு டெயில் எண்டரான நேதன் லயன் 2 பவுண்டரிகளுடன் 16* ரன்களை எடுத்து உதவி செய்து தொல்லை கொடுத்ததால் இங்கிலாந்து கடைசி 2 விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறியது. அதை பயன்படுத்திய கமின்ஸ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44* ரன்கள் எடுத்து கேப்டனாக ஆஸ்திரேலியாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்ததார்.

- Advertisement -

அதனால் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டுவர்ட் பிராட் 3 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் சில விக்கெட்டுகளை எடுப்பதற்காக ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்தும் 400 – 450 ரன்களை எடுக்கும் வாய்ப்பை தவற விட்டு முதல் நாளிலேயே தைரியமாக டிக்ளர் செய்த முடிவு இங்கிலாந்துக்கு தோல்வியை கொடுத்தது.

அத்துடன் 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்கள் முன்னிலை பெற்று சற்று நிதானத்துடன் விளையாடாமல் தொடர்ந்து அடம் பிடித்த இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்ததால் 300க்கும் மேற்பட்ட இலக்கை நிர்ணயிக்க தவறியதும் தோல்வியை கொடுத்தது.

இதையும் படிங்க:131 டெஸ்ட் போட்டியில் விளையாடி ஜோ ரூட் இப்படி அவுட் ஆவுறது இதுதான் முதல் முறையாம் – வியக்க வைக்கும் சாதனை

அந்த வகையில் அதிரடியான அணுகுமுறை அரிதாக அந்த அணிக்கு தோல்வியை கொடுத்த நிலையில் உங்களது ஆட்டம் இந்தியா போன்ற எதிரணிகளிடம் செல்லுபடியாகும் எங்களிடம் வேலைக்காகாது என்று எச்சரித்த ஆஸ்திரேலியா சொன்னதை செய்து காட்டி 1 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.

Advertisement