28 ரன்ஸ்.. ஹாட்ரிக் எடுத்து வங்கதேசத்தை அசால்ட்டாக வீழ்த்திய ஆஸ்திரேலியா.. 17 வருடம் கழித்து கமின்ஸ் வரலாற்று சாதனை

- Advertisement -

ஐசிசி 2024 20 உலகக் கோப்பையில் ஜூன் 21ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ஆன்டிகுவா நகரில் 44வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்துக்கு தன்சிம் ஹசன் முதல் ஓவரிலேயே ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டானார்.

அந்த நிலையில் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த லிட்டன் தாஸ் 16 ரன்களிலும் கேப்டன் சாண்டோ 41 (36) ரன்களிலும் அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் ரிஷத் ஹொசைன் 2, ஷாகிப் அல் ஹசன் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் தவ்ஹீத் ஹரிடாய் அதிரடியாக 40 (28) ரன்கள் குவித்து சவாலை கொடுத்தார்.

- Advertisement -

ஹாட்ரிக் சாதனை:
அப்போது 18வது ஓவரின் 5வது பந்தில் எதிர்ப்புறம் இருந்த முகமதுல்லாவை 2 ரன்னில் போல்டாக்கிய பட் கமின்ஸ் அடுத்ததாக வந்த மெகதி ஹசனை கோல்டன் டக் அவுட்டாகினார். அதைத்தொடர்ந்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹ்ரிடாயை அவுட்டாக்கிய அவர் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 17 வருடங்கள் கழித்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 2வது ஆஸ்திரேலிய பவுலர் என்ற சாதனையையும் பட் கமின்ஸ் நிகழ்த்தினார். இதற்கு முன் கடந்த 2007ஆம் ஆண்டு இதே வங்கதேசத்துக்கு எதிராக கேப்டன் நகரில் ஜாம்பவான் பிரெட் லீ ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவருக்குப் பின் இந்த சாதனையை நிகழ்த்திய பட் கமின்ஸ் ஒட்டுமொத்தமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

- Advertisement -

இறுதியில் தஸ்கின் அஹ்மத் 13* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் வங்கதேசம் 140/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3, ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 141 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 65 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்த டிராவிஸ் ஹெட் 31 (21) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இதையும் படிங்க: எப்போவும் அவர் பொறுப்பை ஏத்துக்கிட்டு இந்தியாவை ஜெய்க்க வைக்கிறாரு.. வேணும்னா 3 பேரை எறக்குகோம்.. ரோகித் பேட்டி

அவரை அவுட்டாக்கிய ரிஷாத் ஹொசைன் அடுத்து வந்த கேப்டன் மார்ஷை 1 ரன்னில் அவுட்டாக்கினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 53* (35) ரன்கள் விளாசினார். அவருடன் மேக்ஸ்வெல் 14* (6) ரன்கள் எடுத்ததால் 11.2 ஓவரில் ஆஸ்திரேலியா 100/2 ரன்கள் எடுத்த போது மழை வந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட முன்னிலை பெற்றிருந்ததால் 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement