ஆஸ்திரேலிய தொடரில் நடந்த சம்பவம் உண்மைதான். மீண்டும் மன்னிப்பு கேட்ட ஆஸி நிர்வாகம் – விவரம் இதோ

Siraj-3
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி இத்தொடரை முழுவதுமாக இழக்கும் என்று கூறிய நிலையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இருப்பினும் இந்த தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல வகையில் இந்திய அணி வீரர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்.

siraj

- Advertisement -

ஒரு பக்கம் ஆஸ்திரேலிய வீரர்களின் ஸ்லெட்ஜிங் மற்றொருபுறம் ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி விமர்சனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் பவுண்டரி லைனில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களை செந்நாய் என்றும் குரங்கு என்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலி செய்தனர். ஒரு கட்டம் வரை பொறுத்துக் கொண்டிருந்த சிராஜ் ரசிகர்களின் கேலி தாங்காமல் மைதானத்தில் இருந்த நடுவரிடம் புகார் அளித்தார்.

மூன்றாவது போட்டியின் இரண்டாம் நாள் புகார் அளித்த சிராஜ் அன்று ஒரு நாள் பொறுத்துக் கொள்ள அடுத்த நாளும் இந்த நிகழ்வு தொடர்கிறது. அதன் காரணமாக மீண்டும் நடுவர்கள் இடம் புகார் அளித்த சிராஜ் பந்துவிசாமல் சிலநிமிடம் மைதானத்தில் அப்படியே நின்றார். அதன்பிறகு சிட்னி கிரிக்கெட் மைதானம் நிர்வாகிகள் இனவெறியுடன் தாக்கிப் பேசிய ஆறு ரசிகர்களை வெறியேற்றியது. அந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

Siraj 2

சிட்னி டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் ரசிகர்களின் இனவெறி கேலிக்கு ஆளானது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்காக நாங்கள் இந்திய அணி வீரர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவு, டிக்கெட் விவரங்கள், ரசிகர்கள் நடத்திய ஆலோசனை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சி எடுத்து வருகிறோம்.

மைதானத்தில் அன்று சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி கேலிக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது நிச்சயம் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அவர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement