ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக இரண்டாவது போட்டி டிசம்பர் 4ஆம் தேதி புகழ்பெற்ற காபா மைதானத்தில் இளஞ்சிவப்பு பந்தில் பகலிரவு போட்டியாக துவங்கியது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து போராடி 334 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக தனது சதத்தை அடித்த ஜோ ரூட் 138*, ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஆஸ்திரேலியா வெற்றி:
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 511 ரன்கள் குவித்து முன்னிலைப் பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 61, ஜேக் வெதர்லேண்ட் 72, மார்னஸ் லபுஸ்ஷேன் 65, அலெக்ஸ் கேரி 63, கேமரூன் கிரீன் 45, மிட்சேல் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
அடுத்ததாக 177 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் விளையாடிய இங்கிலாந்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 15, ஹாரி ப்ரூக் 15, பென் டக்கெட் 15, ஜேமி ஸ்மித் 4, ஓலி போப் 26 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 50, ஜாக் கிராவ்லி 44, வில் ஜேக்ஸ் 41 ரன்கள் எடுத்தார்கள்.
ஸ்மித் உலக சாதனை:
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கேல் நிஷர் 5, மிட்சேல் ஸ்டார்க் 2, ஸ்காட் போலண்ட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இறுதியில் 65 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவை டிராவிஸ் ஹெட் 22, ஜேக் வெதர்லேண்ட் 17*, கேப்டன் ஸ்மித் சரவெடியாக 23* (9) ரன்கள் விளாசி 8 வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலையை அதிகரித்துள்ள ஆஸ்திரேலியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் காண்பித்துள்ளது.
மறுபுறம் இங்கிலாந்துக்கு கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் போராடாமலேயே தோற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் மொத்தம் 5 கேட்ச்கள் பிடித்தார். அதையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மட்டும் அவர் மொத்தம் 39 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது சொந்த மண்ணில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை ஸ்மித் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: எங்க திருமணம் நின்னு போச்சு.. இதோட எல்லாம் முடிஞ்ச்சு.. மந்தனா வெளியிட்ட பதிவு.. நடந்தது என்ன?
இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கிரேக் சேப்பல் 38 கேட்ச்கள் பிடித்ததே முந்தைய சாதனை. அதே பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவில் 32 கேட்ச்கள் பிடித்த ராகுல் டிராவிட் 2வது இடத்தில் இருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற டிராவிட் சாதனையையும் ஸ்மித் சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜோ ரூட்: 213
2. ராகுல் டிராவிட்/ஸ்டீவ் ஸ்மித்: தலா 210
2. மகிளா ஜெயவர்தனே: 205



