எங்க திருமணம் நின்னு போச்சு.. இதோட எல்லாம் முடிஞ்ச்சு.. மந்தனா வெளியிட்ட பதிவு.. நடந்தது என்ன?

Smiriti Mandhana
- Advertisement -

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தம்முடைய திருமணம் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடிய வெற்றிகளில் பங்காற்றி வரும் மந்தனா இசையமைப்பாளர் பாலஸ் முச்சல் என்பவரை காதலித்து வந்தார். அடுத்த சில நாட்களில் மந்தனாவுக்கும் தமக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பாலஸ் தெரிவித்திருந்தார்.

அதற்கு சாட்சியாக 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்தியா இறுதிப் போட்டியில் வென்ற நவிமும்பை மைதானத்தில் மந்தனாவிடம் காதலை சொன்ன அவர் மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார். அப்போதிலிருந்து அவர்களுடைய திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கியது. அடுத்ததாக நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வில் ஜெமிமா, ஸ்ரேயங்கா பாட்டில் உட்பட நிறைய இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

- Advertisement -

நின்ற திருமணம்:

அவர்களுடன் நடனமாடி புகைப்படம் எடுத்துக் கொண்டதை மந்தனாவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அப்படி அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன் திடீரென மந்தனாவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனால் அவர்களுடைய திருமணம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் பாலஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகின. அதற்கடுத்த சில நாட்களில் பாலஸ் மந்தனாவுக்கு உண்மையாக இல்லையென்றும் அவரை ஏமாற்றி விட்டார் என்றும் ரெடிட் இணையத்தில் வாட்ஸ்அப் உரையாடல்கள் வதந்தியாக வெளியாகின. அடுத்த சில நாட்களில் பாலஸ் மற்றும் தமது திருமணம் சம்பந்தமான அனைத்து பதிவுகளையும் மந்தனா இன்ஸ்டாகிராமில் நீக்கினார்.

- Advertisement -

மந்தனா அறிவிப்பு:

இந்நிலையில் தங்களது திருமணம் முழுமையாக நின்றுள்ளதாக மந்தனா அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி ஏராளமான ஊகங்கள் எழுந்தன. எனவே இது வெளிப்படையாக நான் பேச வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன். எனது தனிப்பட்ட விஷயங்களை அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: முதல் இந்திய வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – அபிஷேக் சர்மா

“ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அந்த விஷயத்தை இங்கேயே முடிக்கிறேன். நீங்களும் அதை செய்வீர்கள் என்று விரும்புகிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனி உரிமைகளை மதித்து முன்னேற எங்களுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் என் நாட்டை உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது என்னுடைய உயர்ந்த நோக்கம் என்று நம்புகிறேன். இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடி கோப்பைகளை வெல்வேன் என்று நம்புகிறேன். அதில் தான் எனது கவனம் இருக்கும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இது முன்னேற வேண்டிய நேரம்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement