இந்திய டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவ்வேளையில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் மூன்று சிக்சர் அடித்ததன் மூலம் அபிஷேக் சர்மா ஒரு மாபெரும் சாதனையை டி20 போட்டிகளில் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
அபிஷேக் சர்மா நிகழ்த்திய அசத்தல் சாதனை :
டி20 போட்டிகளை பொருத்தவரை ரோகித் சர்மா இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறியதும் அவரது இடத்தை பிடித்த அபிஷேக் ஷர்மா தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான ஓப்பனர் என்ற இடத்தையும் உறுதி செய்து கொண்டார்.
தொடர்ந்து 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளையாடும் அவர் அதிரடியான துவக்கத்தையும் அளிப்பதனால் இந்திய அணி அதிகளவு போட்டிகளில் வெற்றி பெறவும் உதவுகிறார். இந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் சர்வீசஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 34 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 62 ரன்கள் குவித்து அசத்திய அவர் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை முதல் இந்திய வீரராக நிகழ்த்தியுள்ளார்.
அதாவது இந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் உள்ளூர் டி20 போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து 36 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 101 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 3 சதம் மற்றும் 9 அரைசதம் என 1499 ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாடுவாரா? – கம்பீர் கொடுத்த பதில்
அதிலும் குறிப்பாக இவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வீசஸ் அணிக்கு எதிராக அவர் அடித்த மூன்று சிக்ஸர்களோடு சேர்த்து இந்த ஆண்டு மட்டும் 101 சிக்ஸர்களை அவர் டி20 போட்டிகளில் அடித்துள்ளார். இப்படி ஒரே ஆண்டில் 101 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



