டி20 உலகக்கோப்பை ரத்தானால் பி.சி.சி.ஐ இதனை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வேண்டுகோள்

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடர் ரத்தனால் இந்திய அணியை வைத்து புதிய திட்டம் தீட்டியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ,பாகிஸ்தான் போன்ற சிறிய கிரிக்கெட் வாரியங்கள் நிதிச்சுமையை சந்தித்து வருகிறது.

- Advertisement -

இந்தியா, இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் வாரியங்களும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளது. இதில் அதிக நிதியை வைத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் மற்ற சிறிய கிரிக்கெட் வாரியங்களுக்கு உதவ முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மீட்டிங்கின் போது கரோனா வைரஸ் தொற்று முடிந்த பின்னர் ஐபிஎல், உலக கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலியத் தொடர் ஆகிய அனைத்திற்கும் திட்டம் தீட்டப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடினால் விளம்பரம், தொலைக்காட்சி உரிமம் போன்றவற்றை வைத்து அதிக வருமானம் பார்க்கமுடியும். ஒருவேளை டி20 உலகக் கோப்பை தொடர் ரத்து செய்யப்பட்டால், இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக போட்டிகளில் விளையாடும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டம் தீட்டி வருகிறது.

Ind vs Aus

கூடுதல் போட்டியில் விளையாடினால் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நம்பிக்கை. ஏற்கனவே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளாக மாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் டி20 உலகக் கோப்பைத் தொடர் ரத்தானால்தான் டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாட வாய்ப்புகள் உண்டாகும் இதுதான் ஆஸ்திரேலிய அணியின் திட்டம்.

Ind-vs-aus-1

மேலும் முக்கிய விடயமாக டி20 உலகக்கோப்பை ரத்தானால் அதன்பிறகு இந்திய நிர்வாகம் ஐ.பி.எல் தொடரை நடத்த ஆர்வம் காட்டும். இதன்காரணமாக வெளிநாட்டு வீரர்களுக்கும் சரி அவர்களை சார்ந்த கிரிக்கெட் போர்டுகளுக்கும் இதன்மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் டி20 உலகக்கோப்பை ரத்தானால் இந்தியா அதிக போட்டிகளை நடத்த வேண்டும் வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement