ஒரே நாளில் 20 விக்கெட்ஸ்.. 21ஆம் நூற்றாண்டு காணாத போட்டியில்.. இங்கிலாந்தை பதிலுக்கு தெறிக்க விட்ட ஆஸி

AUS vs ENG
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே 3 – 0 (5) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் விளையாடி கோப்பையை வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து 2010/11க்குப்பின் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 15வது வருடமாக ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது.

அந்த சூழ்நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 5:00 மணிக்குத் துவங்கியது. அப்போட்டி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளான இன்று பாக்ஸிங் டே தினத்தில் கோலாகலமாக துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அசத்தல்:

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை மிகச்சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வெறும் 152 ரன்களுக்கு அவுட்டாக்கி அசத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 29, அலெக்ஸ் கேரி 20, மைக்கேல் நிஷர் 35 ரன்களை எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங்க் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காண்பிக்கும் வகையில் ஆஸ்திரேலியா மிரட்டலாக பந்து வீசியது. குறிப்பாக ஓப்பனிங் வீரர்கள் ஜாக் கிராவ்லி 5, பென் டக்கெட் 2 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டானார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 0, ஜேக்கப் பெத்தல் 1 ரன்களில் மைக்கேல் நிஷர் வேகத்தில் பெவலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

ஒரே நாளில் 20 விக்கெட்ஸ்:

மிடில் ஆர்டரில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 16, ஜேமி ஸ்மித் 2, வில் ஜேக்ஸ் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்கள். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக் 41 (34) ரன்கள் விளாசி போராடி அவுட்டானார். இறுதியில் கஸ் அட்கின்சன் 28 ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை 110 ரன்களுக்கு சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா 42 ரன்களை முன்னிலை பெற்று அசத்தியது. அதிகபட்சமாக மைக்கல் நிஷர் 4, ஸ்காட் போலண்ட் 3, மிட்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையும் படிங்க: குறைச்சு எடை போடாம.. சச்சின் மாதிரி சூர்யவன்சிக்கு இந்திய அணி இந்த வாய்ப்பைக் கொடுக்கனும்.. ஸ்ரீகாந்த்

அடுத்து விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 4/0 ரன்களை எடுத்துள்ளது. அந்த வகையில் இப்போட்டியில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தது. இதன் வாயிலாக 21ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக மெல்போர்ன் மைதானத்தில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்த போட்டி என்ற பெயரை இப்போட்டி பெற்றுள்ளது. இதற்கு முன் 1931/32, 1894/95 ஆண்டுகளில் இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா – இங்கிலாந்து போட்டிகளில் மட்டுமே முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்தன.

Advertisement