- Advertisement -
உலக கிரிக்கெட்

212க்கு அவுட்.. ஃபைனலில் ஆஸியை தெறிக்க விடும் தெ.ஆ.. டொனால்ட், மோர்கலை முந்தி ரபாடா 2 சாதனை

ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் தேதி இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜாவை டக் அவுட்டாக்கிய ககிஸோ ராபடா அடுத்து வந்த கேமரூன் கிரீனையும் 4 ரன்னில் காலி செய்தார்.

மறுபுறம் நங்கூரத்தைப் போட முயற்சித்த மார்னஸ் லபுஸ்ஷேனை 17 ரன்களில் காலி செய்த மார்க்கோ யான்சன் இந்தியாவின் தொல்லை நாயகன் டிராவிஸ் ஹெட்டை 11 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 67/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதத்தை அடித்து 66 ரன்னில் ஐடன் மார்க்ரம் சுழலில் விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

212க்கு ஆல் அவுட்:

அவருடன் சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வெப்ஸ்டர் அரை சதத்தை அடித்து 72 ரன்கள் எடுத்து ரபாடா வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த அலெக்ஸ் கேரி 23 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா 192/5 என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் அடுத்து வந்த கேப்டன் கமின்ஸ் 1, மிட்சேல் ஸ்டார்க் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலியாவை 212 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து தென்னாப்பிரிக்கா தெறிக்க விட்டது. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை முதல் நாளிலேயே அபாரமாக பௌலிங் செய்த தென்னாப்பிரிக்கா ஆல் அவுட் செய்து தங்களுடைய பலத்தை நிரூபித்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ககிஸோ ரபாடா 5, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ரபாடா சாதனை:

இந்தப் போட்டியின் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது அதிக விக்கெட்டுகள் எடுத்த தென்னாபிரிக்க வீரர் என்ற ஜாம்பவான் ஆலன் டொனால்ட் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. டேல் ஸ்டைன்: 439
2. ஷான் பொல்லாக்: 421
3. மகாயா நிடினி: 390
4. ககிஸோ ரபாடா: 331*
5. ஆலன் டொனால்ட்: 330

இதையும் படிங்க: அரிதான மரியாதைக்குரிய கோலி மாதிரி யாரில்ல? தனியாளா ஜெய்ச்சு கொடுத்தாரு.. அப்ரிடி, மியான்தத் கருத்து

அது போக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதுவரை அந்த மைதானத்தில் ரபாடா 3 போட்டிகளில் 18* விக்கெட்டுகள் எடுத்து இந்த சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மோர்னே மோர்கெல் 15 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

- Advertisement -