அரிதான மரியாதைக்குரிய கோலி மாதிரி யாரில்ல? தனியாளா ஜெய்ச்சு கொடுத்தாரு.. அப்ரிடி, மியான்தத் கருத்து

Shahid Afridi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த மாதம் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்கள் அடித்து இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டார். அதே போல 40 வெற்றிகளைப் பெற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக சாதனை படைத்தவர்.

2016 – 2021 வரை அவருடைய தலைமையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்த இந்திய அணி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வரலாற்று வெற்றியை பெற்றது. அப்படிப்பட்ட அவர் சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடினார். எனவே அடுத்த இங்கிலாந்து தொடரில் அவரையும் அவரை விட மோசமாக விளையாடிய ரோஹித் சர்மாவின் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது.

- Advertisement -

கிங் கோலி ஓய்வு:

அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது பெரும்பாலான இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விராட் கோலியை போன்ற வரலாற்றின் கிரேட் பேட்ஸ்மேன்கள் யாருமே இடையிடையே தடுமாற்றமாக விளையாடாமல் இருந்ததில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் கூறியுள்ளார். எனவே 2027 வரை விராட் கோலி விளையாடுவதற்கு தகுதியுடையவர் என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி டெலிகாம் ஆசிய ஸ்போர்ட் எனும் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் கிரேட் பேட்ஸ்மேன் மற்றும் மேட்ச் வின்னர், நல்ல கேப்டன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரைப் பொறுத்த வரை திடீரென தாம் விரும்பிய டெஸ்ட் போட்டிகளை விட்டுச் சென்றுள்ளார். இது பின்னணியில் நிறைய கதை இருப்பதாக பரிந்துரை செய்கிறது”

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன்கள் கருத்து:

“என்னுடைய பார்வையில் விராட் கோலியால் எளிதாக 2027 வரை விளையாடியிருக்க முடியும். ஆம் அவரும் சில தடுமாற்றமான காலங்களைக் கொண்டிருந்தார். ஆனால் எந்த மகத்தான பேட்ஸ்மேன் தடுமாற்றமாக விளையாடாமல் இருந்தார்கள்? என்பதை என்னிடம் காட்டுங்கள்” எனக் கூறினார். அதே நிகழ்ச்சிகள் சாகித் அப்ரிடி பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் நெருப்பானவர் சில நேரங்களில் சர்ச்சைக்குரியவர் என்று விராட் கோலி பற்றி உங்களால் நிறைய சொல்ல முடியும்”

இதையும் படிங்க: இங்கிலாந்தில் அசிங்கமானதை செய்ங்க.. ஆஸி மாதிரி குருட்டுத்தனம் வேணாம்.. ரிஷப் பண்ட்க்கு கங்குலி அட்வைஸ்

“ஆனால் இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்ததை உங்களால் மறுக்க முடியாது. அவரைப் போன்ற வீரர்கள் அரிதானவர்கள். தன்னுடைய அணிக்காக அனைத்தையும் கொடுத்த அவர் தனியாளாக நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் இன்னும் வித்தியாசமாக நடத்தப்பட தகுதியுடையவர். தன்னுடைய திருமணத்திற்கு பின் நிறைய முதிர்ச்சியைப் பெற்ற அவர் நிறைய மரியாதைக்குரியவர்” என்று கூறினார்.

Advertisement