- Advertisement -
இந்திய கிரிக்கெட்

131/2 டூ 138/7.. கோன்ஸ்டஸ் அசத்தல்.. ராணா 6 பந்தில் 4 விக்கெட்.. ஆஸி பிரதமர் அணியை அரை நாளில் அவுட்டாக்கிய இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் பகலிரவு பயிற்சி போட்டி கான்பெராவில் நவம்பர் 30ஆம் தேதி துவங்கியது.

மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்தான அந்தப் போட்டியில் இரண்டாவது நாளில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு மாட் ரென்சா 5 ரன்களில் சிராஜ் வேகத்திலும், குட்வின் 4 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்திலும் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 22-2 என அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

ராணா அசத்தல்:

ஆனால் மற்றொரு துவக்க வீரர் சாம் கோன்ஸ்டஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்த ஜேக் க்ளேடன் 3வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 40 ரன்கள் குவித்த போது ஹர்ஷித் ராணா வீசிய 22வது ஓவரின் 4வது பந்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஓலிவர் டேவிஸ் 0, கேப்டன் ஜேக் எட்வர்ட்ஸ் 1, சாம் கார்பர் 0 ரன்களில் ஹர்ஷித் ராணா வீசிய 22.6, 24.1, 24.3 பந்துகளில் ஆட்டமிழந்தார்கள்.

அந்த வகையில் ஹர்ஷித் ராணா 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து வந்த ஐடன் கோனர் 4 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அவுட்டானார். அதனால் 131-2 என நல்ல நிலையில் இருந்த பிரதமர் அணி 138-7 என சரிந்தது. ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கோன்ஸ்டஸ் சதத்தை அடித்து 107 (97) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா பவுலிங்:

அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய ஹன்னோ ஜேக்கப்ஸ் தன்னுடைய பங்கிற்கு 61 (60) ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா பிரதமர் அணியை 240 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. இந்தியாவுக்கு ஹர்ஷித் ராணா 4, ஆகாஷ் தீப் 2, சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அந்த வகையில் 2வது நாள் காலையில் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் அணியை தேநீர் இடைவெளிக்குள் கிட்டத்தட்ட அரை நாளுக்குள் இந்தியா சுருட்டியது.

இதையும் படிங்க: நாங்க பொம்மை இல்ல.. 2வது டெஸ்டில் இந்தியாவை சாய்க்க ஸ்பெஷல் திட்டம் வெச்சிருக்கோம்.. போலண்ட் பேட்டி

மேலும் இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார். முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விட்டார். ஆனால் அவர் கடந்த நியூசிலாந்து தொடரில் சுமாராக விளையாடினார். எனவே இப்போட்டியில் அவரும் காயமடைந்த சுப்மன் கில்லும் அசத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

- Advertisement -