ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியில் இருந்து கம்பேக் கொடுத்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற போராடி வருகிறது.
மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இந்தியாவை வீழ்த்துவோம் என்று குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியா முதல் போட்டியிலேயே படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியால் தங்களுடைய அணியில் எந்த பதற்றமும் இல்லை என ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் மறுத்துள்ளார்.
பதற்றம் இல்ல:
மேலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற ஒவ்வொரு இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் தனித்தனியாக ஸ்பெஷல் திட்டங்களை ஆஸ்திரேலியா வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணியில் கண்டிப்பாக எந்த பதற்றமும் இல்லை. அதே சமயம் ஒவ்வொரு தனி நபர்களின் செயல்பாடு பற்றி எங்களுடைய அணியில் பேச்சுகள் இருக்கின்றன”
“ஒவ்வொருவரும் அடுத்து வரும் போட்டிகளில் முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். ஆம் நாங்கள் ஒரு போட்டியில் தோற்றோம். அதனால் கட்டிலுக்கு வெளியே நாங்கள் பொம்மைகளாக சென்றோம் என்று நினைக்கவில்லை. தற்போது வித்தியாசமான இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டங்கள் பற்றி நாங்கள் பேசி வருகிறோம்”
ஸ்பெஷல் திட்டம்:
“அதை உங்களுக்கு நான் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் நல்ல செட்டிலான திட்டங்களை வகுத்துள்ளோம். முதல் போட்டியில் சந்தித்த தோல்வியால் எங்களுடைய வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்திருக்கலாம். ஏனெனில் முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் நன்றாக பேட்டிங் செய்தார். ராகுல் இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்தார்”
இதையும் படிங்க: கம்பீர் வேலைய ஆரம்பிச்சிட்டாரு.. ஆஸியில் அஸ்வின் கழற்றி விட்டு சுந்தரை தேர்ந்தெடுக்க இதான் காரணம்.. ஹர்பஜன்
“அதனால் அடுத்த வாரம் நடைபெறும் போட்டியில் எங்களுடைய திட்டங்களை சற்று மாற்றக் கூடும்” என்று கூறினார். ஆனால் இந்திய அணி முதல் போட்டியில் ரோகித் இல்லாமலேயே பும்ரா தலைமையில் அபாரமாக விளையாடி வென்றது. தற்போது இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார். அதனால் கொஞ்சம் கூடுதலாக பலமடைந்துள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றிக்காக போராடும் என்று நம்பலாம்.



