டி20 உ.கோ : அடப்பாவமே ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லையாம் – புள்ளி விவரம் இதோ

- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்ற ஆஸ்திரேலிய அணியானது தற்போது நடப்பு சாம்பியன் என்ற மிகப்பெரிய கௌரவத்தோடு தங்களது நாட்டில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.

AUS

- Advertisement -

இதில் நேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற இருந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி என இரண்டு போட்டிகளுமே மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதன் காரணமாக நான்கு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டது.

இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் : நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ரத்து என மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று மோசமான ரன் ரேட் அடிப்படையில் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

Points

அதேவேளையில் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து இன்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் வெற்றியோடு சேர்த்து 5 புள்ளிகளுடன் முதல் இடத்தை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் ரன் ரேட்டின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை விட முன்னிலையில் உள்ளனர். இந்த சுற்றில் கிட்டத்தட்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி அரையிறுதி வாய்ப்பை தற்போதைய உறுதி செய்துள்ளது.

- Advertisement -

அதேவேளையில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளுக்கும் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து இரண்டு போட்டியில் வென்றாலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாது என்று தற்போதைய புள்ளி விவரம் கூறுகிறது. இதன் காரணமாக நடப்பு சாம்பியனாக இருந்தும் மழை காரணமாக இந்த அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி தவற விட இருக்கிறது.

இதையும் படிங்க : நெனச்சாவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எல்லாருமே அப்செட்டா தான் இருக்காங்க – நிக்கோலஸ் பூரான் வருத்தம்

இதன்காரணமாக மழையின் மீது தற்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோபங்களை வெளிப்படுத்தி திட்டி வருகின்றனர். அதேபோன்று இங்கிலாந்து அணி அடுத்தடுத்த போட்டிகளில் சாதாரணமாக வெற்றி பெற்றாலே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்றும் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement