பி.சி.சி.ஐ யின் கோரிக்கையை உடனடியாக ஏற்று சம்மதம் தெரிவித்த ஆஸி வாரியம் – எதற்கு தெரியுமா ?

Pink-ball

இந்திய அணி ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நான்கு டெஸ்ட் 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடர் நடைபெறப்போகிறது. இதற்காக மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

INDvsAUS

இந்த மூன்று அணியிலும் சேர்த்து மொத்தம் 31 வீரர்கள் இருக்கின்றனர். வழக்கமாக ஆஸ்திரேலிய அணி டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் வாரத்தின் போது “பாக்சிங் டே” டெஸ்ட் என்னும் மரபு டெஸ்ட் போட்டியை விளையாடுவது வழக்கம். பாரம்பரியப்படி வருடாவருடம் இதனை ஒரு விழாவாகக் கொண்டாடுவார்கள்.

அதன்படி இந்த வருடம் டிசம்பர் 26 முதல் முப்பதாம் தேதி வரை மெல்பேர்ன் மைதானத்தில் “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியும், அதன்பின்னர் ஜனவரி முதல் மாதத்தில் சிட்னி மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியான பிங்க் பால் டெஸ்ட் போட்டியாகவும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது.

aus

ஆனால் பிங்க் பால் டெஸ்ட் போட்டி மூன்றாம் தேதிக்கு பதிலாக ஏழாம் தேதி துவங்கவேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கையை வைத்தது. இதற்கு உடனடியாக இதற்கு செவி சாய்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் மரபை மாற்றி கொள்ளாமல் இருக்க வேண்டும். பாக்ஸிங் டெஸ்ட் முடிந்தவுடன் பின்க் டெஸ்ட் போட்டிதான் விளையாடவேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் முறையிட்டார். ஆனால் அவரின் கருத்திற்கு செவிசாய்க்காமல் பி.சி.சி ஐ யின் கோரிக்கையை ஆஸி கிரிக்கெட் வாரியம் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.