ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது. அடுத்ததாக அந்த இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டி நவம்பர் 14ஆம் தேதி புகழ்பெற்ற காபா மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டி மழையால் மிகவும் தாமதமாக துவங்கியது. அதன் காரணமாக இருதரப்புக்கும் தலா 7 ஓவர்கள் கொண்ட போட்டி நடைபெறும் என்று நடுவர்கள் அறிவித்தார்கள். அந்த நிலையில் துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மேக்ஸ்வெல் அசத்தல்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க வீரர்கள் மேத்தியூ ஷார்ட் 7, ஜேக் பிரேசர் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் 3வது இடத்தில் பாகிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அந்த வகையில் அட்டகாசமாக விளையாடிய அவர் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (19) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த டிம் டேவிட் 10 (8), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 21* (7) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள்.
அவர்களுடைய ஆட்டத்தால் 7 ஓவர்களில் ஆஸ்திரேலியா 93-4 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக அப்பாஸ் அஃப்ரிடி அதிரடி 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 95 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பர்ஹான் 8, கேப்டன் ரிஸ்வான் 0, பாபர் அசாம் 3, உஸ்மான் கான் 4, ஆகா சல்மான் 4 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார்கள்.
ஆஸ்திரேலியா முன்னிலை:
அதனால் 16-5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு மிகவும் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியாக மோசமான சாதனையும் படைத்தது. அடுத்ததாக ஹசிபுல்லா கான் 12 (8) ரன்களும் ஷாஹீன் அஃப்ரிடி 11 (8) ரன்களும் குவித்து போராடி பெவிலியன் திரும்பினர். இறுதியில் அப்பாஸ் அஃப்ரிடி 20* (10) ரன்கள் எடுத்தும் 7 ஓவரில் பாகிஸ்தான் 64-9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதையும் படிங்க: இந்த 2 காரணத்தால் முதல் டெஸ்டில் இந்தியாவை 4 நாட்களில் ஆஸ்திரேலியா வீழ்த்தும்.. ஜூலியன் பேட்டி
அதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தத் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சேவியர் பார்லட் மற்றும் நாதன் எலீஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்த வகையில் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியா இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.