இந்த 2 காரணத்தால் முதல் டெஸ்டில் இந்தியாவை 4 நாட்களில் ஆஸ்திரேலியா வீழ்த்தும்.. ஜூலியன் பேட்டி

Brandon Julian
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை பதிவு செய்தது. எனவே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற அத்தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சாதனை படைத்தது. எனவே நியூசிலாந்திடம் தோற்றாலும் அந்த உத்வேகத்துடன் விளையாடி ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் பெர்த் நகரில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 4 நாட்களில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று முன்னாள் வீரர் பிரண்டன் ஜூலியன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

4 நாட்களில் வீழ்த்துவோம்:

அதற்கான 2 காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியை 4 நாட்களில் வீழ்த்தும். டாப் ஆர்டரில் இருந்தே இந்திய அணியில் கவலையை கொடுக்கும் விஷயங்கள் இருக்கிறது. ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்பதை அவரே தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக இருப்பார். முதன்மை பவுலரான அவருக்கு கேப்டனாக செயல்படுவதால் நிறைய அழுத்தம் ஏற்படும்”

“அவர் அற்புதமான பவுலர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திடீரென உங்களுடைய முதன்மை பவுலர் கேப்டனாக செயல்படுவது வித்தியாசமான போட்டியாக இருக்கும். விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த ஊரிலேயே நம்ப முடியாத வகையில் அவுட்டானார். எனவே அவர் தன்னுடைய சிறந்த ஃபார்மில் இல்லை”

- Advertisement -

தடுமாறும் விராட் கோலி:

“அவர் கேப்டன் மற்றும் பயிற்சியாளருடன் நெருங்கி செயல்படுவதாக தெரியவில்லை. ஆனால் பெர்த்தில் அவர்கள் வெற்றிக்காக விளையாட முயற்சித்தால் அங்கேயே அனைத்து முடியலாம் என்று நினைக்கிறேன். நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் விராட் கோலி ஸ்பின்னர்களிடம் அவுட்டானார். இங்கே அவருக்கு நேதன் லயன் எதிரியாக இருப்பார்”

இதையும் படிங்க: ஆமா சி.எஸ்.கே நிர்வாகத்திடம் இருந்து போன் வந்தது உண்மைதான்.. தோனியை இன்னும் பாக்கல – ஆயுஷ் மாத்ரே

“அதே சமயம் இங்கே விராட் கோலி மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கான சூழ்நிலைகளும் இருக்கிறது. பெர்த் மைதானத்தில் வேகம், பவுன்ஸ் இருக்கும். அங்கே அவர் ஏற்கனவே கமின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோருக்கு எதிராக விளையாடியுள்ளார். எனவே அவர்களுக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற்றால் இந்தத் தொடர் விராட் கோலிக்கு நன்றாக அமையக்கூடும் என்று கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலியா அவரை வேகமாக அவுட்டாக்க வேண்டும். அவரை ஆஸ்திரேலிய அணி எளிதில் ரன்கள் அடிக்க விடாது” என்று கூறினார்.

Advertisement