5 பந்தில் 18 ரன்ஸ்.. மழையால் அம்பயரை அவமதித்த இங்கிலாந்து கேப்டன்.. ரசிகர்கள் விளாசலுக்கு பின் வருத்தம்

AUS vs ENG
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 23ஆம் தேதி கான்பேரா நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் அதிரடியாக 185-5 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக கேப்டன் தஹிலா மெக்ராத் 48* (35), பெத் மூனி 44 (31), கிரேஸ் ஹரிஷ் 35* (17) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக சார்லி டீன் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக 186 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு மாயா பவுச்சிர் 13 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

மழையால் வெற்றி:

ஆனால் டேனியல் வைட் அதிரடியாக விளையாடி 52 ரன்களும் சோபியா டன்ங்லி 32 ரன்களும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்கள். மிடில் ஆர்டரில் நட் ஸ்கீவர் 22 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் கடைசி நேரத்தில் கேப்டன் ஹீதர் நைட் அதிரடியாக விளையாடி 43* (19) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அவருடைய அதிரடியால் இங்கிலாந்துக்கு கடைசி 5 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் அப்போது ஜோராக வந்த மழைப் போட்டியை நிறுத்தியது. அப்போது சிறிது நேரம் காத்திருந்து பார்த்த நடுவர்கள் போட்டி நேரம் முடிவுக்கு வந்ததால் டிஎல்எஸ் விதிமுறையை பின்பற்றினார்கள். அதன்படி 19.1 ஓவரில் 168-4 ரன்கள் எடுத்த இங்கிலாந்து டிஎல்எஸ் விதிமுறைப்படி ஆஸ்திரேலியாவை விட 6 ரன்கள் குறைவாக எடுத்திருந்தது.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:

அதன் காரணமாக ஆஸ்திரேலியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தார்கள். அதனால் ஏமாற்றமடைந்த இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் 5 பந்துகள் மட்டுமே இருந்ததால் இன்னும் சிறிது நேரம் காத்திருந்து போட்டியை நடத்தியிருக்கலாமே என்ற வகையில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக நடுவர்களிடம் அவர் கை கொடுக்காமல் சென்றார்.

இதையும் படிங்க: 20-30 பந்திலேயே ஆட்டத்தை மாற்றுவதில் இவர் கில்லாடி.. தொடர்ந்து சேன்ஸ் குடுங்க – பியூஷ் சாவ்லா ஆதரவு

அவரது இந்த செயல் நடுவர்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதன் காரணமாக இறுதியில் தங்களுடைய வெற்றியை பறிக்கும் நோக்கத்தில் முடிவை எடுக்காத நடுவர்கள் மழையை கருத்தில் கொண்டே விதிமுறைக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக ஹீதர் நைட் தெரிவித்தார். எனவே அவர் தாம் அப்படி நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மொத்தத்தில் 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு போட்டியில் அதிகபட்சமாக விக்கெட்டுகளை மேகன் ஸ்கட் எடுத்தார்.

Advertisement