20-30 பந்திலேயே ஆட்டத்தை மாற்றுவதில் இவர் கில்லாடி.. தொடர்ந்து சேன்ஸ் குடுங்க – பியூஷ் சாவ்லா ஆதரவு

Chawla
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒன்றாக ஓய்வு அறிவித்திருந்தனர். இதன் காரணமாக சூரியகுமார் யாதவ் தலைமையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட புதிய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர்தான் :

அதோடு தொடர்ந்து வெற்றிகரமாக அடுத்த அடுத்த தொடர்களையும் கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இருந்தார். அதிலும் குறிப்பாக இந்த 74 ரன்களில் அவர் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியிருந்தார். நீண்ட காலமாக வாய்ப்பின்றி தவித்து வந்த அபிஷேக் சர்மாவுக்கு தற்போது தான் இந்திய டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இனிவரும் தொடர்களில் அவரை தொடர்ந்து இந்திய அணியில் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அபிஷேக் சர்மா போட்டியின் துவக்க ஓவர்களிலேயே ரிஸ்க் எடுத்து விளையாடக்கூடியவர். அவர் ரன்களை குவிக்க துவங்கிவிட்டால் நிச்சயம் அது இந்திய அணிக்கு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆகவே இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் அவர் 50 முதல் 60 ரன்கள் அடித்தால் அதை வெறும் 20-22 பந்துகளில் எடுத்து விடுவார். எனவே அவரைப் போன்ற ஒரு வீரரை இந்திய அணியில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அவர் கொடுக்கும் அதிரடியான துவக்கம் இந்திய அணியின் பெரிய ஸ்கோருக்கு உதவும். அதனால் அவரை தொடர்ச்சியாக அணியில் வைத்திருக்க வேண்டும் என்று பியூஸ் சாவ்லா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த வருஷம் தோனி கப்பை தூக்கப்போறது கன்பார்ம்.. தல செய்த காரியம் – விவரம் இதோ

அவர் கூறியது போலவே அபிஷேக் சர்மா அதிரடியான துவக்க வீரர் என்பது மட்டும் இன்றி பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர் மத்தியிலும் அவருக்கு ஆதரவு குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement