இந்த வருஷம் தோனி கப்பை தூக்கப்போறது கன்பார்ம்.. தல செய்த காரியம் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் தான் மேலும் ஒரு சீசன் விளையாட இருப்பதாக தோனி அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சொந்த ஊர் கோவிலில் தோனி நடத்திய வழிபாடு :

அதோடு மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியும் அவரை 4 கோடி ரூபாய்க்கு அன் கேப்டு வீரராக அணியில் தக்க வைத்ததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது உறுதியாகியது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 43 வயதை எட்டியுள்ள தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதால் இந்த ஐபிஎல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாகி உள்ளது. இந்நிலையில் தற்போது தோனி செய்துள்ள செயல் ஒன்று அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது

அதுமட்டும் இன்றி நிச்சயம் இம்முறை அவர் கோப்பையை வெல்வது உறுதி என்றும் பேசும் வகையில் மாறியுள்ளது. அந்த வகையில் தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தியோரி மா கோயிலுக்கு சென்று தோனி வழிபாடு நடத்தியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடர்க்கு முன்னதாகவும், 2013 ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்கு முன்னதாகவும், 2023 ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவும் இதே கோயிலுக்கு சென்று தோனி வழிபட்டிருந்தார். அப்போதெல்லாம் தோனியின் தலைமையிலான அணி வெற்றி பெற்றிருந்தது.

இதையும் படிங்க : 5 விக்கெட்ஸ்.. ரிஷப் பண்ட் அணியை 188க்கு ஆல் அவுட் செய்த ஜடேஜா.. ஆல் ரவுண்டராக அசத்தல்

இதன் காரணமாக இம்முறையும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் அந்த கோயில் வழிபாடு நடத்தியுள்ளதால் நிச்சயம் இம்முறை ஐபிஎல் கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பின்னர் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்த தோனி தற்போது மெல்ல மெல்ல பேட்டிங் பயிற்சியை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement