கொண்டாடிய சக வீரர்கள்..! முறுபக்கம் கோப்பைக்கு புஜை ..! குறட்டைவிட்டு தூங்கிய தோனி..!

- Advertisement -

கேப்டன் கூல் தோனி போட்டியில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பார். தனது அணி வெற்றி பெற்றாலும் அதனை ஆரவாரமாக கொண்டாட மாட்டார் தோனி. அதனை இன்றும் பின்பற்றி வரும் தோனி சென்னை அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் தூங்கியுள்ளார்.
msflight

ஐ.பி.எல் கோப்பையையோடு சென்னையில் தங்களது ரசிகர்களை சந்திக்க நேற்று மாலை சென்னை அணி வீரர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர், பின்னர் விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே சென்னை ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வந்தனர்.

- Advertisement -

ஆனால் சென்னை அணியின் கேப்டனான தோனி தனக்கும் சென்னை அணி கோப்பையை வெற்றிபெற்றதற்கும் சம்மந்தமே இல்லை என்பது போல விமானத்தில் தூங்கி கொண்டுவந்தார் தோனி. விமானத்தில் அனைவரும் அங்கிருந்தவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி வந்த நிலையில் தோனி தனது மகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.
dhoni-flight
அவ்வளவு ஏன் சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் கூட தோனி தனது மகள் மற்றும் மனைவியுடன் தான் இருந்தார். மேலும் இறுதி போட்டியின் வெற்றிக்கு பின்னர் சென்னை வீரர்கள் அனைவருமே ட்ரஸ்ஸிங் ரூமில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தோனி எப்போதும் போல ஒரு சிறய சிரிப்புடன் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார் தோனி

Advertisement