ஆசியக்கோப்பை : தினமும் 100-150 சிக்ஸர்களை அடித்து பயிற்சி எடுக்கிறேன் – பாகிஸ்தான் வீரர் அதிரடி பேட்டி

Asif Ali
- Advertisement -

இன்னும் சில மாதங்களில் ஆஸ்திரேலியா மண்ணில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தற்போது அதற்கு தயாராகும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோத இருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.

அதனால் இம்முறை மீண்டும் பாகிஸ்தான் அணியை பழி தீர்க்க இந்திய அணி காத்திருக்கிறது. இதன் காரணமாக இவர் அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதைய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டிக்காக தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ஆசிப் அலி ஒரு நாளைக்கு 100 சிக்ஸர் முதல் 150 சிக்ஸர்கள் வரை அடித்து பயிற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

asif 2

இது குறித்து அவர் கூறுகையில் : நான் தினமும் 100 முதல் 150 சிக்ஸர்கள் வரை அடித்து பயிற்சி செய்து வருகிறேன். அப்போதுதான் போட்டியின் போது என்னால் 5 சிக்ஸர்கள் வரை எளிதாக அடிக்க முடியும். டி20 கிரிக்கெட்டில் நான் பின்வரிசையில் பேட்டிங் செய்ய வரும் போது ஓவருக்கு 10 ரன்கள் வரை அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் இறங்குவேன்.

- Advertisement -

இதுபோன்ற பிரஷரான சூழ்நிலையில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னால் லைன் மற்றும் லென்த்தை சரியாக கணித்து சிக்ஸர்களை அடிக்க முடியும் என்றாலும் ஒரே மாதிரி விளையாடினால் பவுலர்கள் சுதாரித்து விடுவார்கள்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 6 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

எனவே தற்போது வெவ்வேறு வகையான ஷாட்டுகளையும் விளையாட முயற்சி செய்து வருகிறேன். ஆசிய கோப்பையில் நிச்சயம் எனது சிறப்பான ஆட்டம் வெளிவரும் என பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement