- Advertisement -
உலக கிரிக்கெட்

38 வயதில் இப்படி ஒரு சாதனையா? அறிமுக போட்டியிலேயே அசரவைத்த பாகிஸ்தான் வீரர் – விவரம் இதோ

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 93 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

38 வயதில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய பாகிஸ்தான் வீரர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி ராவல்பின்டி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி தங்களது முதல் இன்னிங்சில் 333 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது பாகிஸ்தான் அணியை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 404 ரன்கள் குவித்து அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி சார்பாக அறிமுகமாகிய 38 வயதான ஆசிப் அப்ரிடி தனது அறிமுக போட்டியிலே மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியில் 34.3 ஓவர்களை வீசிய அவர் 79 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அக்டோபர் 22ஆம் தேதியான இன்றைய கணக்குப்படி அவருக்கு 38 வயது 301 நாட்கள் ஆகியுள்ளது. இப்படி அதிக வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அந்த அறிமுக போட்டியிலேயே ஐந்திற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இஷான் கிஷன் ஒருத்தருக்காக மல்லு கட்டும் 3 அணிகள்.. டிரேடிங் செய்ய காரணம் என்ன? – விவரம் இதோ

இவருக்கு முன்னதாக கடந்த 76 ஆண்டுகளுக்கு முன்னர் 1949-ஆம் ஆண்டு நியூசிலாந்தை சேர்ந்த பென் கிரேஸ்வெல் என்பவர் தனது 34-ஆவது வயது 146-வது நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்த வேளையில் அவரது இந்த சாதனையை தற்போது ஆசிப் அப்ரிடி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -