ஃபிக்ஸிங் செய்து தடை பெற்ற வீரரை.. 1955க்குப்பின் 38 வயதில் அறிமுகமாக்கி.. சாதனை வீரராக்கிய பாகிஸ்தான்

Asif Afridi
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அடுத்ததாக வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி அக்டோபர் 20ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள ராவில்பிண்டி நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணிக்காக 38 வயதாகும் சுழல் பந்து வீச்சாளர் ஆசிப் அப்ரிடி பாகிஸ்தானுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக களமிறங்கினார். 2019 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் 2022ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

- Advertisement -

ஃபிக்ஸிங் தடை வீரர்:

அத்துடன் சூதாட்டத் தரகர்கள் தம்மை தொடர்பு கொண்டது பற்றி அவர் பாகிஸ்தான் வாரியத்திடம் தெரிவிக்கவில்லை. அதைக் கண்டறிந்த பாகிஸ்தான் வாரியம் ஆசிப் அப்ரிடி 2 வருடங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தடை விதிப்பதாக 2023 பிப்ரவரி மாதம் அறிவித்தது. அடுத்த வருடமே அவருடைய தடைக்காலத்தை திடீரென பாகிஸ்தான் வாரியம் ஒரு வருடமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

அப்படி சூதாட்டப் புகாரில் சிக்கி தடை பெற்ற அவருக்கு இப்போட்டியில் பாகிஸ்தான் அணி அறிமுகமாகக் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. குறிப்பாக இப்போதெல்லாம் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து எதிரணிகளை தோற்கடிக்க முயற்சித்து வருகிறது. அதில் இங்கிலாந்தை தோற்கடித்த பாகிஸ்தான் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன் தென்னாப்பிரிக்காவையும் முதல் போட்டியில் தோற்கடித்தது.

- Advertisement -

38 வயதில் சாதனை வெற்றி:

எனவே 2வது போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து தொடரை வெல்லும் முனைப்புடன் ஸ்பின்னரான அவரை 38 வயதில் பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக 2வது அதிக வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை ஆசிப் அப்ரிடி படைத்துள்ளார். 1955ஆம் ஆண்டு மிரன் பக்ஸ் பாகிஸ்தானுகாக அதிக (47) வயதில் அறிமுகமான வீரராக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: இதெல்லாம் பிரச்சனையில்ல.. ஓவர்திங்க் பண்ணாம திருப்பி அடிங்க விராட் கோலி.. ஹைடன் அட்வைஸ்

அவருக்கு அடுத்தபடியாக ஆசிப் அப்ரிடி பாகிஸ்தானுக்காக 38 வயதில் அறிமுகமாகியுள்ளார். இந்தியா போன்ற அணிகளில் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்த அஸ்வினுக்கு 37 வயதில் இடம் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் 38 வயது வீரரை இந்தப் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement