இதெல்லாம் பிரச்சனையில்ல.. ஓவர்திங்க் பண்ணாம திருப்பி அடிங்க விராட் கோலி.. ஹைடன் அட்வைஸ்

Matthew Hayden
- Advertisement -

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் மழையால் 26 ஓவராக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு காரணமானது.

குறிப்பாக 224 நாட்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா பெரிய ரன்கள் குவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தம்முடைய 500வது போட்டியில் ரோஹித் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த விராட் கோலி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக டக் அவுட்டானார்.

- Advertisement -

ஓவர்திங்கிங் வேண்டாம்:

அப்படி ஆரம்பத்திலேயே அவர்கள் வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. அத்துடன் பல மாதங்கள் கழித்து விளையாடும் அவர்கள் ஃபார்மை இழந்து விட்டார்களா? என்ற கேள்வியும் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சுமார் 14,000 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி முதல் போட்டியில் வெளிப்படுத்திய ஆட்டத்தில் பெரிதளவில் பிரச்சனையில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

எனவே முதல் போட்டியில் என்ன தவறு செய்தோம் என்று அதிகம் சிந்திக்காமல் 2வது போட்டியில் கவனம் செலுத்தி ரன்கள் அடிக்குமாறு அவர் விராட் கோலியை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஹைடன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் பந்தை தடுத்து நிறுத்தும் திறன் மற்றும் தொடர்புப் புள்ளிகள் ஆகியவை சிறப்பாக இருக்கிறது”

- Advertisement -

ஹைடன் அட்வைஸ்:

“ஒருநாள் கிரிக்கெட்டில் சுமார் 14,000 ரன்கள் அடித்த பின் அவர் தன்னுடைய அணுகுமுறையில் எந்த கேள்வியையும் கொண்டிருக்கக் கூடாது. சீராக பந்தை ஆன் தி ரைசில் அடிக்கும் அவர் டைமிங்கை முன்னதாகவே கண்டறிகிறார். எனவே தன்னுடைய ஆட்டத்தைப் பற்றி அவர் தனக்குத்தானே அதிகமாக எதையும் சிந்திக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: பெர்த்தில் விராட், ரோஹித் சொதப்ப இதான் 2 காரணம்.. இந்தியாவை 300 ரன்ஸ் அடிக்க வைப்பாங்க.. கவாஸ்கர் பேட்டி

“அதிகம் சந்திப்பது மட்டுமே அவரை தவறு செய்ய வைக்கலாம். தெளிவு, உறுதி மற்றும் ஆட்டத்தைப் படிக்கும் திறன் ஆகியவை இருக்கும் போது விராட் கோலி ஆபத்தானவராக இருப்பார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2வது போட்டி அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போட்டி விராட் கோலிக்கு மிகவும் பிடித்த அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement