திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை மனம் வருந்திய கங்குலி. கைவிடப்பட்ட போட்டி – விவரம் இதோ

Motera-1
- Advertisement -

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆக அகமதாபாத்தில் தயாராகிவரும் “மோதிரா” மைதானத்தை பிசிசிஐ வரும் மார்ச் மாதம் திறக்க இருந்தது. ஆனால் தற்போது அந்த மைதானத்தில் கட்டுமான பணிகள் முழுமை அடைய ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் அந்த மைதானத்தை திறக்க முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

motera

- Advertisement -

இதனால் அங்கு முதல் போட்டியாக நடைபெற இருந்த உலகம் லெவன் மற்றும் ஆசிய லெவன் அணிகளுக்கிடையேயான போட்டியை நடத்துவதற்கான முடிவை பிசிசிஐ கைவிட இருப்பதாக தெரிகிறது. இதை அடுத்து இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளது.

இந்த இரண்டு போட்டியில் ஒன்றை உலகின் மிகப்பெரிய மைதானம் ஆன “மோதிரா”வில் நடத்த திட்டமிடப்படிருந்தது இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் போல் தலைவர் நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில் : இரண்டு போட்டிகளில் ஒன்றை பிசிசிஐ நடத்த இருந்தது. ஆனால் மைதானம் முழுமையாக தயாராக காரணத்தினால் தற்போது இரண்டு போட்டியிலும் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

Ganguly

வங்கதேசத்தின் மறைந்த அரசியல்வாதி ஷேக் முஜிர் ரகுமானின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு மார்ச்சு மாதம் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் உலக லெவன் மற்றும் ஆசிய லெவன் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி வங்கதேசத்தில் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் ஆசிய லெவன் அணி சார்பாக இந்திய வீரர்கள் 5 பேர் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement