PAK vs SL : ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? – வரலாற்று புள்ளிவிவரம் இதோ

PAKvsSL
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-வது ஆசிய கோப்பை தொடரானது நாளை செப்டம்பர் 11-ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரானது 20 ஓவர்கள் கொண்ட தொடராக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என ஆறு அணிகள் பங்கேற்று விளையாடின.

IND vs PAK Asia Cup

- Advertisement -

அதன்படி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் ஏ பிரிவில் தகுதி பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளும் “சூப்பர் 4” சுற்றிற்கு முன்னேறினர். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. அப்படி நடைபெற்ற இந்த “சூப்பர் 4” சுற்று நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்த சுற்றின் அடிப்படையில் மூன்று போட்டிகளில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியும், மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியும் நாளைய இறுதி போட்டியில் விளையாட இருக்கின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Nissanka

இதில் பாகிஸ்தான் அணியானது பாபர் அசாம் தலைமையிலும், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு அணிகளிலுமே மிகச்சிறப்பான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருப்பதினால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமைவது மட்டுமின்றி வெற்றியாளரும் யார் என்பதை தெரிந்து கொள்ள படு சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து கணிப்பது கடினம் என்றாலும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் இலங்கை அணி தான் முன்னிலையில் உள்ளது. ஏனெனில் இதுவரை நடைபெற்றுள்ள ஆசிய கோப்பைகளின் அடிப்படையில் இலங்கை அணி 5 முறை (1986, 1997, 2004, 2008, 2014) ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் திடீர் ஓய்வு.ரசிகர்கள் வருத்தம் – காரணம் இதோ

அதே வேளையில் பாகிஸ்தான் அணியானது (2000 மற்றும் 2012) ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே ஆசிய கோப்பையை வெற்றி பெற்றுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியை காட்டிலும் இலங்கை அணிக்கு கூடுதல் சாதகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிகபட்சமாக இந்திய அணி ஏழு முறை ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement