100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது ஜோக் அல்ல. இந்திய வீரருக்கு பாராட்டுகளை தெரிவித்த அஷ்வின்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரில் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வீழ்த்திய அந்த ஒரு விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Ishanth

- Advertisement -

இதற்கு முன்னதாக கபில்தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 434 விக்கெட்டுகளையும், ஜாகிர்கான் 311 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். அவரை தொடர்ந்து மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இந்த சாதனையில் இணைந்துள்ளார் இஷாந்த் ஷர்மா. இந்நிலையில் அவர் விரைவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறேன் என அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இஷாந்த் சர்மா மிகவும் கடினமான உழைப்பை கொண்ட கிரிக்கெட்டர். அவரை நான் பார்த்த வரைக்கும் அவர் மிக சிறந்த உழைப்பாளி.

6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவருக்கு இது போன்ற சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த பல்வேறு அம்சங்கள் தேவைப்படுகின்றன. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறப்பாக பந்து வீசி வருகிறார். 2007-08 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய தொடரில் இந்திய அணியில் அவர் ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தினார். அது பிறகு ஏராளமான தொடர்களுக்கு அவர் சென்றுள்ளார்.

ishanth 2

பல காயங்கள், பல சிக்கல்கள் என அனைத்தையும் கடந்து 100வது டெஸ்ட் போட்டியை அவர் நெருங்கி வருகிறார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது ஜோக் அல்ல, மிக மிக பெரிய சாதனை. நான் 400 – 500 விக்கெட்டை நோக்கி செல்ல முடியும். ஆனால் இஷாந்த் சர்மா 400 அல்லது 500 விக்கெட்டை வீழ்த்துவதை பார்க்க விரும்புகிறேன். ஏராளமான இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

ishanth 1

இஷாந்த் சர்மாவின் மிகப்பெரிய பலமே சிரிப்புதான், எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார். சோர்வாக இருந்தால் கூட அவர் சிரித்துக் கொண்டே இருப்பார் இது அவருடைய வேடிக்கையான குணம் என்று அஷ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement