எனது 2 மகள்களுக்காக இந்த ஹெல்ப்ப பண்ணுங்க.. சி.எஸ்.கே அணி நிர்வாகத்தின் உதவியை நாடிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin-Daughters
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி 2 பலம் வாய்ந்த அணிகளான சிஎஸ்கே மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தனது கடைசி சீசனில் விளையாட இருக்கும் தோனியையும், ரன் மிஷின் விராட் கோலியையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது. அந்த வகையில் மார்ச் 22-ஆம் தேதி துவங்க உள்ள இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைன் வாயிலாக மட்டுமே கிடைக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் மார்ச் 18-ஆம் தேதியான இன்று டிக்கெட் விற்பனை நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு இணையத்தில் வாயிலாக டிக்கெட் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் சில டெக்னிக்கல் கோளாறு காரணமாக இந்த டிக்கெட்டுகள் பகல் 12 மணி அளவில் விற்பனை செய்யப்பட்டது.

அப்படி நடந்த டிக்கெட் விற்பனையானது 10 நிமிடங்களிலேயே முற்றிலும் நிறைவடைந்தது என வலைதள பக்கத்தில் காண்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் தனக்கும் கிடைக்கவில்லை என்றும் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

மேலும் எப்படியாவது இரண்டு டிக்கெட் தனக்கு வேண்டும் என்ற வகையிலும் இந்திய அணியின் முன்னணி வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் :

இதையும் படிங்க : 6, 6, 4, 4, 4, 2.. ஒரே ஓவரில் 24 ரன்ஸ்.. இலங்கைக்கு பதிலடி கொடுத்த வங்கதேசம்.. பழி தீர்த்தது எப்படி?

சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் மிகவும் டிமாண்ட்டாக இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி மற்றும் ஓப்பனிங் செர்மனி என இரண்டையும் காண எனது மகள்கள் விரும்புகிறார்கள். எனவே உதவி எனக்கு உதவி செய்யுமாறு சென்னை அணியின் நிர்வாகத்தை டேக் செய்து ரவிச்சந்திரன் அஸ்வின் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement