6, 6, 4, 4, 4, 2.. ஒரே ஓவரில் 24 ரன்ஸ்.. இலங்கைக்கு பதிலடி கொடுத்த வங்கதேசம்.. பழி தீர்த்தது எப்படி?

BAN vs SL ODI
- Advertisement -

வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. அதில் முதல் போட்டியில் வென்ற வங்கதேசத்துக்கு இரண்டாவது போட்டியில் வென்ற இலங்கை பதிலடி கொடுத்தது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி மார்ச் 18ஆம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.

ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி தடுமாற்றமாக விளையாடி 50 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கைக்கு நிசாங்கா 1, பெர்னாண்டோ 4, கேப்டன் குஷால் மெண்டிஸ் 29, சமரவிக்ரமா 14, அசலங்கா 37 என இலங்கையின் முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

வங்கதேசத்தின் பதிலடி:
அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் ஜனித் லியாங்கே அதிரடியாக 11 பவுண்டரி 2 சிக்சருடன் சதமடித்து 101* (102) ரன்கள் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 236 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு அனாமல் ஹைக்கை 12 ரன்களில் காலி செய்த லகிரு குமாரா அடுத்ததாக வந்த கேப்டன் சாந்தோவை ஒரு ரன்னில் அவுட்டாக்கினார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் தன்சித் ஹசன் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால் அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுத்த முயற்சித்த தவ்ஹீத் ஹ்ரிடாய் 22, முகமதுல்லா 1 ரன்னில் மீண்டும் லகிரு குமாரா வேகத்தில் ஆட்டமிழந்தனர். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சிறப்பாக விளையாடிய டன்சித் ஹசன் அரை சதமடித்து 84 (81) ரன்களில் ஹசரங்கா சுழலில் சிக்கினார். அப்போது வந்த முஸ்பிகர் ரஹீம் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் மெதுவாக விளையாடிய மெஹதி ஹசன் 25 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அப்போது வந்த ரிசாகத் ஹுசைன் வெற்றியே உறுதியான பின்பு ஹசரங்கா வீசிய 40வது ஓவரில் 6, 6, 4, 4, 4, 2 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 24 ரன்களை விளாசி மொத்தமாக 48* (15) ரன்கள் குவித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ரஹீம் 37* (36) ரன்கள் எடுத்ததால் 40.2 ஓவரிலேயே 237/6 ரன்கள் எடுத்த வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: 3வது ப்ளேயர் காலியா? காயமடைந்து வெளியேறிய வெளிநாட்டு சிஎஸ்கே வீரர்.. சென்னை ரசிகர்கள் கவலை

குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இலங்கை சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு தோல்வியை கொடுத்தது. அதற்கு இந்த ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற என்ற கணக்கில் வென்ற வங்கதேசம் பதிலடி கொடுத்து இலங்கை அணியை பழி தீர்த்தது. இதைத்தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி இவ்விரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement