3வது ப்ளேயர் காலியா? காயமடைந்து வெளியேறிய வெளிநாட்டு சிஎஸ்கே வீரர்.. சென்னை ரசிகர்கள் கவலை

Rahman Injury
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது. மார்ச் 22ஆம் தேதி துவங்கும் அந்த தொடரில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொண்டு கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றிகரமாக துவங்க தயாராகி வருகிறது.

ஆனால் கடந்த வருடம் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து 5வது கோப்பையை வெல்ல உதவிய நியூசிலாந்து துவக்க வீரர் டேவோன் கான்வே இம்முறை காயத்தால் பெரும்பாலான போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது சென்னைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே போல கடந்த வருடம் சிறப்பாக பந்து வீசி குட்டி மலிங்கா என்று ரசிகர்களிடம் பெயர் வாங்கிய இலங்கை வீரர் மதிசா பதிரனாவும் சமீபத்தில் காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

3வது வீரர் காயம்:
அதனால் அவரும் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது சென்னைக்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி மார்ச் 18ஆம் தேதி சட்டோகிராம் நகரில் நடைபெற்றது. அந்த போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமான் 9 ஓவரில் 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து நன்றாக பந்து வீசினார்.

இருப்பினும் லேசான காயத்துடன் பந்து வீசிய அவர் 10வது ஓவரின் கடைசி பந்தை வீசியதும் கீழே விழுந்தார். அப்போது அதிகப்படியான தசைப்பிடிப்பு காயத்தால் துடித்த அவர் எழுந்து நடக்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக மேற்கொண்டு விளையாட முடியாத அவரை பயிற்சியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றது வங்கதேச ரசிகர்களை விட சிஎஸ்கே ரசிகர்களுக்கு கலக்கத்தை கொடுத்தது.

- Advertisement -

ஏனெனில் இவ்வளவு பெரிய காயத்தை சந்தித்துள்ள அவர் இன்னும் 4 நாட்களில் துவங்கும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கான்வே, பதிரனா ஆகியோரை தொடர்ந்து 3வது வெளிநாட்டு வீரராக ரகுமான் காயத்தால் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கான்வேவுக்கு பதிலாக 2023 உலகக் கோப்பையில் அசத்திய ரச்சின் ரவீந்தரா இம்முறை விளையாட தயாராக உள்ளார்.

இதையும் படிங்க: எல்லாம் அரசியல்.. கிரிக்கெட்டை விட்டுட்டு எம்பிஏ படிக்க போலாம்ன்னு நெனச்சு அழுதேன்.. 2017 சோகத்தை பகிர்ந்த அஸ்வின்

அதே போல பதிரனா, ரகுமான் இடத்தை நிரப்ப சஹர், தாக்கூர், முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ் பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் போன்ற இந்திய பவுலர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே இருக்கும் வீரர்களை சரியாக பயன்படுத்துவதில் கில்லாடியான தோனி இம்முறையும் அணியை சிறப்பாக வழி நடத்தி சென்னைக்கு 6வது கோப்பையை பெற்றுக் கொடுக்கப் போராடுவார் என்று நம்பலாம்.

Advertisement