எல்லாம் அரசியல்.. கிரிக்கெட்டை விட்டுட்டு எம்பிஏ படிக்க போலாம்ன்னு நெனச்சு அழுதேன்.. 2017 சோகத்தை பகிர்ந்த அஸ்வின்

Ravichandran Ashwin 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனைகளை படைத்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரராக அஸ்வின் சாதனை படைத்தார். அதை கௌரவிக்கும் வகையில் சென்னையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி தமிழ்நாடு வாரியம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முன்னதாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அஸ்வின் கடந்த 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தோனி தலைமையில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே ஹர்பஜன் சிங்கை முந்தி முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார். அப்படியே தோனி கேப்டனாக இருந்த 2016 டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியில் அஸ்வினுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

கடினமான காலம்:
ஆனால் தோனி விலகியதும் வந்த விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி அடங்கிய தலைமை கூட்டணி அஸ்வினை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விட்டு குல்தீப் மற்றும் சஹாலை கொண்டு வந்தது. இந்நிலையில் அந்த சோகமான காலகட்டங்களில் கிரிக்கெட்டை விட்டு எம்பிஏ படிக்க சென்று விடலாம் என்று நினைத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் கிரிக்கெட்டை விட்டு விட முடிவெடுத்தேன். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். வாழ்வில் எதை செய்தாலும் அந்த தொழிலில் என்னால் முடிந்தவரை சிறந்து விளங்க முயற்சிப்பேன். எனவே அந்த நேரத்தில் எம்பிஏ படித்து மார்க்கெட்டிங் செல்லலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் கார்ப்பரேட் சம்பந்தமான விஷயங்களை பேசும் போதெல்லாம் அது அரசியல் என்று என்னிடம் அப்பா சொல்வார்”

- Advertisement -

“அப்படி பேசிக் கொண்டிருந்த போது என் அப்பா “நீ மிகவும் நேர்மையாக இருக்கிறாய் என்பது உனக்கு தெரியுமா” என்று என்னிடம் சொன்னார். அதனாலேயே நீ திருகப்படுகிறாய் என்று அவர் என்னிடம் சொல்லி விட்டு சென்றார். நான் உணர்ச்சி வசப்பட்டவன் அல்ல. நான் வலிமையானவன் என்று நினைக்க விரும்புகிறேன். அதனால் அறையைக் பூட்டிக்கொண்டு அழுதேன். ஏனெனில் என் அப்பா இப்படி சொல்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன செய்தார் என்பதை உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு அந்த உரிமை இருக்கு.. ரோஹித் கேப்டனா இல்லனாலும் பிரச்சனை இல்ல.. பாண்டியா பேட்டி

“என் வீட்டில் உள்ளவர்களுக்கு நான் சுமையாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் இருட்டான அறையில் என்னை தனிமைப்படுத்துவேன். கிரிக்கெட்டை பார்ப்பதிலும் எனக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தது. இருப்பினும் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நான் தெளிவான தெளிவை பெற வேண்டும் என்று நினைத்தேன். குறிப்பாக நான் யார் எங்கே இருக்கிறேன் என்பதை பார்க்க விரும்பினேன். அப்போது நான் சில வெளிப்புற உதவியை (கவுன்சிலிங்) நாடினேன். அது என் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியது” என்று கூறினார்.

Advertisement