ரசிகர்களுக்கு அந்த உரிமை இருக்கு.. ரோஹித் கேப்டனா இல்லனாலும் பிரச்சனை இல்ல.. பாண்டியா பேட்டி

Hardik Pandya 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழ்நாடு தலைநகர் சென்னையில் துவங்க உள்ளது. இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார் என்பது அந்த அணியின் பெரும்பாலான ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்று சொல்லலாம். ஏனெனில் சச்சின் தலைமையில் கோப்பையை வெல்வதற்கு திண்டாடிய மும்பைக்கு 2013இல் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.

அப்போதிலிருந்து அனைத்து வீரர்களையும் சிறப்பாக வழி நடத்திய அவர் அடுத்த 10 வருடங்களில் 5 கோப்பையை வென்று மும்பை வெற்றிகரமான அணியாக இன்று ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் சமீப காலங்களாக பேட்டிங்கில் தடுமாறும் அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விடுவதாக அறிவித்த மும்பை நிர்வாகம் பாண்டியனை குஜராத் அணியிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

உரிமை இருக்கு:
அதனால் நன்றி மறந்த மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் நீக்கப்பட்ட நாளன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்வதை நிறுத்தினர். அத்துடன் காயம் என்ற பெயரில் நாட்டுக்காக விளையாடாத பாண்டியா பணத்துக்காக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடுவதற்கும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாம் கேப்டனாக பொறுப்பேற்றதை விமர்சிக்க ரசிகர்களுக்கு உரிமை இருப்பதாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.இருப்பினும் அனைத்தையும் கடந்து மும்பைக்கு 6வது கோப்பையை வென்று கொடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் ரோஹித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை”

- Advertisement -

“ஏனெனில் உதவி தேவைப்பட்டால் எனக்காக அவர் இருப்பார். அதே சமயம் இந்திய அணியின் கேப்டனாக அவர் இருப்பது எனக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் மும்பை அணி அவருடைய தலைமையில் பெரிய சாதனைகளை படைத்துள்ளது. அதை நான் இப்போதிலிருந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன். அவருடைய கேப்டனாக இருப்பது எனக்கு எந்த வித்தியாச உணர்வையும் கொடுக்கவில்லை. அவருடைய தலைமையில் நான் என்னுடைய கேரியர் முழுவதும் விளையாடியுள்ளேன்”

இதையும் படிங்க: முதலில் வாயை கழுவுங்க.. பெங்களூரு பற்றி மைக்கேல் வாகன் வெளியிட்ட கணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் அதிருப்தி

“எனவே சீசன் முழுவதும் அவர் எனக்கு ஆதரவாக தோள் மீது கை போட்டு உதவுவார் என்பது எனக்கு தெரியும். ரோகித் நீக்கப்பட்ட முடிவு சற்று பின்னடைவாகும். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நாங்கள் ரசிகர்களை மதிக்கிறோம். அதே நேரம் விளையாட்டில் கவனம் செலுத்துகிறோம். நான் முரண்பாடுகளை கட்டுப்படுத்துகிறேன். என்னால் கட்டுப்படுத்த முடியாத இடத்தில் கவனம் செலுத்தவில்லை. அதே சமயம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் சொல்வதை சொல்ல முழு உரிமை உண்டு” என்று கூறினார்.

Advertisement