2023 உலகக்கோப்பை : போட்டிகளின் நேரத்தினை மாத்துங்க. இதெல்லாம் சரியில்ல – தமிழக வீரர் வேண்டுகோள்

Ashwin
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற இருக்கும் இந்த மிகப்பெரிய தொடரில் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. ஏற்கனவே இந்த தொடருக்கான 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற வேளையில் இஞ்சியுள்ள இடங்களுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வருகிறது.

worldcup

- Advertisement -

இந்த தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த பின்னர் எஞ்சியுள்ள அணிகள் இந்த உலகக்கோப்பை தொடருக்கான பட்டியலில் இணையும். இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான முழு அட்டவணையையும் சமீபத்தில் ஐசிசி வெளியிட்டு இருந்தது. அதில் வெகுசில போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாகவும், மற்ற போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்முறை இந்தியாவில் நடத்த இருக்கும் பகலிரவு போட்டிகளை சற்று முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும் என தமிழக வீரர் அஸ்வின் வேண்டுகோள் வைத்துள்ளார். ஏனெனில் வழக்கமாகவே இந்தியாவில் நடைபெறும் போட்டிகள் பகல்நேர போட்டிகளாக இருந்தால் 9 அல்லது 9.30 மணிக்கு துவங்கும். அதே போன்று பகலிரவு போட்டியாக இருந்தால் 2 அல்லது 2.30 மணிக்கு துவங்கும் இதுதான் வழக்கமான ஒரு போட்டி நேரமாக இருந்து வருகிறது.

IND vs AUS KL Rahul Jadeja

ஆனால் உலகக்கோப்பை தொடரை பொருத்தவரை பகலிரவு போட்டியை மதியம் 2 மணிக்கு ஆரம்பிக்காமல் காலை 11 முதல் 11.30-க்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதனால் சில பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என்றும் தமிழக வீரர் அஸ்வின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வழக்கமாக உலகக்கோப்பை போட்டிகள் கோடை காலத்தில் நடத்தப்படும்.

- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டு கூட பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை தான் உலகக்கோப்பை தொடரானது நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை தொடர் நடைபெறுவதால் நிச்சயம் பகலிரவு போட்டிகளின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கக்கூடும். எனவே இது ஒருசில அணிகளுக்கு பாதகமாக கூட அமையலாம்.

இதையும் படிங்க : ரொம்ப வருஷமா ஆடுறாரு அவருக்கு தான் நீங்க துணைக்கேப்டன் பதவி குடுத்திருக்கனும் – சவுரவ் கங்குலி கருத்து

எனவே பனிப்பொழிவு காரணமாக எந்த ஒரு அணியும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே 11 முதல் 11.30 மணிக்கு போட்டி தொடங்கினால் சரியாக இருக்கும் என்று தான் கூறுவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்படி 11 மணி முதல் 11.30-க்குள் ஆரம்பித்துவிட்டால் நிச்சயம் பனிப்பொழிவு ஆரம்பிப்பதற்குள் போட்டியை முடித்து விடலாம் என்பதனாலே இந்த கோரிக்கையை முன் வைப்பதாகவும் அஸ்வின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement