IND vs AUS : இன்னும் ஒரு விக்கெட் போதும். டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைக்காக காத்திருக்கும் – ரவி அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 88 டெஸ்ட் போட்டிகள், 113 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். தற்போது 36 வயதை எட்டியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.

Ashwin

- Advertisement -

இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இன்றளவும் முன்னணி வீரராகவே தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரும் சாதனை ஒன்றினை படைக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் 3043 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களும் அடங்கும். அதேபோன்று பந்து வீச்சிலும் அவர் இதுவரை 449 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Ashwin

இதன்மூலம் கபில் தேவுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அஷ்வின் ஏற்கனவே செய்திருந்தார். இந்நிலையில் அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மற்றொரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது 449 விக்கெட்டுகளுடன் இருக்கும் அஷ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களையும், 450 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மூன்றாவது சர்வதேச வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார்.

இதையும் படிங்க : பும்ரா மீது விராட் கோலி ரொம்ப கோவமா இருந்தார். ஏன் தெரியுமா? – இஷாந்த் சர்மா பகிர்ந்த சுவாரசிய தகவல்

இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஜாம்பவானான ஷேன் வார்னே மற்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இருவரும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில் அஷ்வின் இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால் அவரும் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது வீரராக தனது பெயரை வரலாற்றில் பதிய காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement