தப்பு பண்ணி மாட்டிக்கொண்ட அஷ்வின். கண்டிப்பா அபராதம் கட்டியே ஆகனுமாம் – பி.சி.சி.ஐ அதிரடி உத்தரவு

- Advertisement -

தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான விஜய் ஹசாரே தொடரின் இறுதிப்போட்டி நேற்று பெங்களூர் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழக வீரர் முரளி விஜய் ஆட்டம் இழந்தவுடன் 3 ஆவது வீரராக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தமிழ்நாடு அணிக்காக களம் இறங்கினார்.

Ashwin 1

- Advertisement -

அவர் இந்த போட்டியில் மூன்றாம் நிலையில் விளையாடியதால் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதிலும் முக்கியமாக இந்த போட்டியில் பேட்டிங் செய்தபோது அவர் பிசிசிஐ-யின் முக்கிய விதி ஒன்றினை மீறி தப்பு செய்தது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி இந்திய தேசிய அணியில் பயன்படுத்தப்படும் பிசிசிஐ ஹெல்மெட்டை உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தக்கூடாது என்ற ஒரு விதிமுறை பிசிசிஐ-யிடம் உள்ளது.

அப்படி பயன்படுத்தினாலும் பிசிசிஐ லோகோவை மறைத்து அதன்மீது டேப் ஒட்டி அந்த ஹெல்மட்டை பயன்படுத்தலாம் என்பது பி.சி.சி.ஐ-யின் ஒரு பொதுவான விதியாகும். அந்த விதி அனைத்து வீரர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான் ஒருவேளை அதனை மறந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று விதி இருக்கிறது. இதனால் அஷ்வினின் இந்த விதிமீறல் காரணாமாக இப்பொது அவர்மீது நடவடிக்கை எடுக்க இருக்கிறார்கள்.

Ashwin

எனவே அவர் தெரிந்து செய்திருந்தாலும் சரி, தெரியாமல் செய்து இருந்தாலும் சரி குற்றம் குற்றமே என்ற அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும் இந்திய அணியில் விளையாடும் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோரும் இந்த இறுதிப்போட்டியில் விளையாடினார்கள். அவர்களும் பிசிசிஐ ஹெல்மெட்டை தான் இந்த போட்டியில் பயன்படுத்தினார்கள் என்றாலும் அவர்கள் பிசிசிஐ லோகோவின் மீது டேப் ஒட்டி நேற்றைய போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement