கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வரும் வேளையில் வருடா வருடம் இந்த தொடரின் மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பல ஆண்டுகள் கழித்தும் ஐபிஎல் தொடர் இன்றளவும் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு ஐபிஎல் தொடர் தரமான ஒரு தொடராக இருந்து வருகிறது.
கடவுள் கொடுத்த பரிசு அந்த அணி :
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டம் வென்ற வேளையில் தற்போதே அடுத்த ஆண்டிற்கான ஐ.பி.எல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வேளையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே பல்வேறு சுவாரசிய கருத்துக்களை முன்னாள் வீரர்களும், அனுபவ வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் மிகவும் உண்மையான ரசிகர்களை கொண்ட அணி எது? என்பது குறித்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்சிபி ரசிகர்கள் விராட் கோலியை மிகவும் நேசிக்கிறார்கள். அதோடு என்னதான் ஆர்சிபி அணியை பலரும் கிண்டல் செய்தாலும் ரசிகர்கள் அந்த அணிக்கு விசுவாசமாக இருந்து வருகின்றனர். உண்மையிலேயே தங்களது அணியின் மீது விசுவாசமாக இருக்கும் ரசிகர்களை கொண்ட அணியாக கடவுள் கொடுத்த பரிசாக நான் ஆர்.சி.பி அணியை பார்க்கிறேன்.
இதையும் படிங்க : அவர் வந்துட்டாரு.. 79 கோடி.. இனிமேல் ரோஹித் மும்பையிலிருந்து வெளியேற வாய்ப்பில்லை.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
ஏனெனில் எந்த ஒரு சூழலிலும் ரசிகர்கள் ஆர்.சி.பி அணிக்கு துணை நிற்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அந்த அணி மிகச் சிறப்பாக விளையாடி மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் கூட ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆனாலும் இன்றளவும் ரசிகர்கள் ஆர்.சி.பி அணியை தாங்கிப் பிடித்து வருகின்றனர் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



