ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அதற்கு முன் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் விவரங்களை அக்டோபர் 31ம் தேதிக்குள் வெளியிட கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றி விடுமா? ஹர்திக் பாண்டியாவை தக்க வைக்குமா? என்ற கேள்வி காணப்படுகிறது.
ஏனெனில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கடந்த வருடம் கழற்றி விட்ட மும்பை பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்புக்கு மத்தியில் விளையாடிய மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து வெளியேறியது.
வெளியேற வாய்ப்பில்லை:
அதனால் தம்மை மதிக்காத மும்பையிலிருந்து ரோஹித் வெளியேறுவார் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால் ரோஹித் சர்மா மும்பையில் இருந்து வெளியேறி பெங்களூரு அணிக்கு கேப்டனாவுக்கு செயல்பட வேண்டும் என்று முகமது கைஃப் வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில் மகிளா ஜெயவர்தனே மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ளதால் மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மாவை வெளியேற விடமாட்டார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை அணியின் தக்க வைக்கும் வீரர்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மகிளா ஜெயவர்தனே மீண்டும் வந்துள்ளார். எனவே சில மாற்றங்கள் நடக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை தங்களுடைய கரு வீரர்களை தக்க வைக்க முயற்சிக்கிறது. ஹர்திக் பாண்டியா, சூரியகுமார், பும்ரா, ரோகித் சர்மா, திலக் வர்மா/இஷான் கிசான் ஆகியோரை அவர்கள் தக்க வைக்கக்கூடும்”
மும்பையின் பழைய வீரர்கள்:
“மேலும் அவர்களிடம் நேஹல் வதேரா இருக்கிறார். இப்படி அவர்கள் தக்க வைக்க நிறைய வீரர்கள் உள்ளனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட 6 வீரர்களை மும்பை 79 கோடிக்கு தக்க வைத்து பின்னர் ஏலத்திற்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது. அந்த 6 வீரர்களுமே இந்தியர்கள். எனவே அவர்கள் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது”
இதையும் படிங்க: சுயநலமின்றி அடித்து நொறுக்கும் ரோஹித் அப்படியே இதையும் செஞ்சா ஹேப்பியா இருப்போம்.. டிகே விருப்பம்
“அதனால் மும்பை அந்த வீரர்களை தக்க வைக்க வாய்ப்புள்ளது” என்று கூறினார். அத்துடன் சமீபத்திய வருடங்களில் பும்ரா இருந்தும் மும்பை அணி பந்து வீச்சில் 200 – 220 ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு காரணமானது. அதை தவிர்ப்பதற்காகவே தற்போது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மும்பையின் பவுலிங் பயிற்சியாளராக பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளதாகவும் ஆகாஷ் சோப்ரா விவரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



