ஐ.பி.எல் ஏலத்துக்கு மட்டும் வந்தா அந்த பாகிஸ்தான் வீரர் 14-15 கோடி ஏலம் போவாரு – பாராட்டிய அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு முதலில் சில சீசன்களில் ஐபிஎல் விளையாட அனுமதி இருந்தாலும் அதற்கு அடுத்து இரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படாமல் இருந்து வருகிறார்கள்.

INDvsPAK

- Advertisement -

அதே வேளையில் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடர் போன்ற போட்டிகளில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மீது எப்பொழுதுமே அதிக அளவு எதிர்பார்ப்பு எழும் அந்த வகையில் தற்போது துபாயில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அந்த வேளையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முடிந்த இந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் டி20 உலக கோப்பை போட்டியின் போது 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

shaheen afridi

ஆனால் இம்முறை பாகிஸ்தான அணியை மிக எளிதாக வீழ்த்தி இந்திய அணி தங்களது பலத்தை நிரூபித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தனது youtube சேனலின் மூலமாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஷாகின் அப்ரிடியை பாராட்டி பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் போது ஷாகின் அப்ரிடி இந்திய அணியின் டாப் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இம்முறை அவர் இல்லாதது பாகிஸ்தானுக்கு நிச்சயம் ஒரு பின்னடைவு தான். என்னை பொறுத்தவரை ஷாஹீன் அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஏலத்திற்கு வந்தால் நிச்சயம் அவர் 14 முதல் 15 கோடி வரை ஏலத்திற்கு போவார்.

இதையும் படிங்க : IND vs PAK : 2017இல் தவறவிட்டாலும் இம்முறை அசராமல் சாதித்து 15 வருட அசத்தல் சாதனையை தகர்த்த பாண்டியா – ஜடேஜா

ஏனெனில் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு நல்ல வேகம் இருப்பது மட்டும் இன்றி புதுப்பந்திலும் அற்புதமாக வீசுகிறார். அதோடு டெத் ஓவரிலும் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். அவருடைய யார்க்கர் மற்றும் இன்ஸ்விங் பால்கள் என அனைத்துமே மிகச் சிறப்பாக உள்ளதால் அவர் ஐபிஎல் ஏலத்தில் பெரிய மதிப்பிற்கு போவார் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement