KXIP vs RCB : கடைசி ஓவரை சர்பிராஸ் வீச இதுவே காரணம் – அஸ்வின் பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Ashwin
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

பிறகு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் கோலி 67 ரன்களும் மற்றும் டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை அடைய வைத்தார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Gayle

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது : நான் கடைசி ஓவரை லெக் ஸ்பின்னர் வீச வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்படும்போது சர்பராஸ் கானை பந்துவீச அழைத்தேன். அதே சமயம் நானும், சாம் குரானும் பந்துவீச கூடாது என்று தெளிவான முடியில் இருந்தேன்.

Devilliers

இருப்பினும், எதிர்முனையில் திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது 6 ரன்கள் கட்டுப்படுத்துவதற்கு ரொம்ப கடினமான ஒன்றாகும். இந்த போட்டியில் நாங்கள் தோற்க பீல்டிங் தவறுகளும், பந்துவீச்சும் காரணம் என்று நான் கருதுகிறேன் என்று அஸ்வின் கூறினார்.

Advertisement