ஆர்.சி.பி அணி டிம் டேவிடை இப்படி எடுத்தது உண்மையிலேயே மிகச்சிறப்பான முடிவு – அஷ்வின் பாராட்டு

Ashwin and Tim David
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியில் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அந்த அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிடும் திகழ்ந்தார். எப்போதெல்லாம் ஆர்சிபி அணி இக்கட்டான நிலையில் சிக்குகிறதோ அப்போதெல்லாம் தனது அதிரடியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அவர் சில வெற்றிகளையும் தேடிக் கொடுத்தார்.

ஆர்.சி.பி அணி எடுத்த முடிவு சரியானது : ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே தான் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரரான டிம் டேவிட் குறித்து தனக்கு தெரிந்த சில அணிகளிடம் அவர்களை ஏலத்தில் எடுக்குமாறு கூறியும் அவர்கள் யாரும் என் பேச்சை கண்டு கொள்ளவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை பதிந்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் இதை சொல்லக்கூடாது ஆனால் கடந்த மெகா ஏலத்திற்கு முன்னதாகவே சில ஐபிஎல் அணிகளிடம் நான் அவரை ஏலத்தில் எடுக்கும்படி என்னுடைய முடிவை வெளிப்படையாக தெரிவித்தேன். அதாவது ஆஸ்திரேலியா அதிரடி வீரரான டிம் டேவிட்டை ஏலத்தில் எடுங்கள் என்று நான் கூறியிருந்தேன்.

ஆனால் அவர்களோ டிம் டேவிடின் ஆட்டம் மோசமாக மாறிவிட்டது. எனவே அவரை எடுக்க விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டனர். அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட ஆர்.சி.பி அணி அவரை மூன்று கோடி ரூபாய்க்கு அவரை எடுத்தது மிகச் சிறப்பான ஒரு முடிவு.

- Advertisement -

ஏனெனில் அவர் டி20 கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திர வீரர். உயரமான உடல்வாகினை கொண்ட அவர் வலுவான நீண்ட கைகளை கொண்ட பேட்ஸ்மேன். அதனால் அவர் நிச்சயம் பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தக் கூடியவராக இருக்கிறார் என்று அப்போதே கணித்தேன்.

இதையும் படிங்க : தெரிஞ்து 2.2 கோடி.. நமக்கு தெரியாம சிஎஸ்கே இதை செஞ்சு ப்ரேவிஸை வாங்கிருக்காங்க.. அஸ்வின் பேட்டி

அவர் இனிவரும் காலங்களில் இன்னும் அதிரடியான ஆட்டத்தை அந்த அணிக்காக தொடர்வார் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார். அவர் கூறியது போன்று தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிம் டேவிட் ஆஸ்திரேலிய அணிக்காக டாப் ஆர்டரில் களமிறங்கி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement