- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 போட்டிகளில் வெற்றி என்பது இந்த ஒரு விஷயத்திலேயே தெரிந்துவிடும் – தமிழக வீரர் அஷ்வின் கருத்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறி இரண்டு வாரங்கள் ஆகிய நிலையிலும் இன்றளவும் இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. அதேபோன்று தற்போது இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடர் பங்கேற்று விளையாடி வருகிறது.

இவ்வேளையில் இந்திய அணியின் சீனியர் வீரரான அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் தனது youtube சேனலில் கிரிக்கெட் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை கூறிவரும் அஸ்வின் : தற்போது டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் வெற்றி எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்பது குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட் என வரும்போது வெற்றி தோல்வி என்பது பெரும்பாலும் மிகச் சிறிய வித்தியாசத்தில் தான் நடக்கும். குறிப்பாக ஒரு அணி ஒரே பந்தில் போட்டியை இழக்கலாம் அல்லது ஒரே ஒரு பந்தில் போட்டியில் வெற்றியும் பெறலாம். எனவே டி20 போட்டியின் முடிவு என்பது விளையாடும் இரு அணிகளுக்குமே சிறிய இடைவெளியில் தான் கிடைக்கும்.

ஆனால் இவை அனைத்தையும் விட டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை பவர்பிளே என்பது இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் நிறைய போட்டிகளின் முடிவுகள் பவர்பிளே ஓவர்களிலேயே தெரிந்துவிடும். ஒரு அணி பவர்பிளே-வின் முடிவில் 30 ரன்களை அடித்து மற்றொரு அணி பவர்பிளே-வின் முடிவில் 60 ரன்களை அடித்திருந்தால் அங்கேயே ஆட்டம் முடிந்தது.

இதையும் படிங்க : என்னதான் பிரஷர் இருந்தாலும் நான் ஃப்ரீயா பேட்டிங் பண்ண இதுதான் காரணம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இப்படி டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுவது பவர்பிளே ஓவர்கள் தான். எனவே நமது பலத்தை அறிந்து பவர்பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என அஷ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by