- Advertisement -
உலக கிரிக்கெட்

ஒரு காலத்துல எப்படி இருந்த டீம்.. இப்போ இப்படி ஆகிடுச்சு.. பாகிஸ்தான் அணி குறித்து கவலை தெரிவித்த அஷ்வின்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது அண்மையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி இருந்தது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி முதல் முறையாக வங்கதேச அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியை நெனைச்சா கஷ்டமா இருக்கு :

அதேபோன்று வங்கதேச அணி பெற்ற இந்த வெற்றி அந்நாட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற வங்கதேச அணி இம்முறை 2 போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

அதே வேளையில் சொந்த மண்ணில் கடந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் பாகிஸ்தான் அணி மோசமான நிலையை சந்தித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த வீழ்ச்சி குறித்து பேசியுள்ள தமிழக வீரர்கள் அஷ்வின் கூறுகையில் :

பாகிஸ்தான் அணியில் ஒரு காலத்தில் ஜாம்பவான்கள் வீரர்கள் நிரம்பி இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலை எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அதேவேளையில் வங்கதேச அணிக்கு இது ஒரு அற்புதமான வெற்றி.

- Advertisement -

பாகிஸ்தான் அணியானது கடந்த 1000 நாட்களாக சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் போனது வருத்தமான விடயம். முன்பு பாகிஸ்தான் அணியில் இம்ரான் கான், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர், வாசிம் அக்ரம், சயீத் அன்வர், இன்சமாம் உல் ஹக் என ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்தனர்.

இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த ஹார்டிக் பாண்டியா இவர்தான்.. தம்பி கலக்குறாரு – தமிழக வீரர் அஷ்வின் பாராட்டு

ஆனால் தற்போது உள்ள பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. பாகிஸ்தான் அணி இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்தால் உண்மையிலேயே என்னால் அதை நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -