இந்த ஆண்டும் நிச்சயம் ஐ.பி.எல் போட்டிகளில் இதனை செய்வேன் – அஷ்வின் அதிரடி

raviashwin

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்களின் பேராதரவோடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருட ஐபிஎல் தொடர் 13 ஆவது சீசன் கோலாகலமாக ஆரம்பிக்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய தொடராக நடைபெறும் இந்த ஐபிஎல் திருவிழா ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும்.

Ashwin

சென்ற ஆண்டு பஞ்சாப் அணியின் கேப்டனாக விளையாடிய அஸ்வின் தற்போது டெல்லி அணிக்கு மாறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் நடந்த போட்டி ஒன்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான பட்லரை “மான்கட்” முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தார். இந்த விடயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் இந்த மான்கட் ரன்அவுட் அப்போது சர்ச்சையாக வெடித்தது ஆனால் இது குறித்து விளக்கமளித்த அஸ்வின் அதனை விதிமுறைப்படி செய்தார் என்று கூறினார். இந்நிலையில் தற்போது மார்ச் மாதம் துவங்க உள்ள ஐபிஎல் குறித்து பேசிய அஸ்வின் :இந்த முறையும் ஐ.பி.எல் தொடரில் மான்கட் முறையில் ரன்அவுட் செய்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் பந்துவீசும்போது கிரீசை விட்டு வெளியேறுவது யாராக இருந்தாலும் நான் மான்கட் முறையில் ரன்அவுட் செய்வேன் என்று பேட்டி அளித்துள்ளார். இதன்மூலம் இந்த தொடரிலும் பரபரப்பான சில விடயங்கள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -